அழுத்தமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். காக்க முட்டை படத்தில் நடித்து அந்த படத்திற்காக சிறந்த நடிகை விருதையும் பெற்றார். இந்த படத்தில் என்ற ஐஸ்வர்யா ராஜேஷ் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடித்திருந்தார். தற்போது மணிரத்னம் இயக்கத்தில் சரத் குமார், ராதிகா, விக்ரம் பிரபு நடித்துள்ள ‘வானம் கொட்டட்டும்’ என்ற படத்தில் நடித்துள்ளார் ஐஸ்வர்யா.
நடிகர் சங்க தேர்தல் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து விஷால் மேல்முறையீடு
இந்தப் படத்தில் விக்ரம் பிரபுவுக்கு தங்கையாக நடித்திருக்கும் அவர், முன்னதாக ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு தங்கையாகவும் நடித்திருந்தார். இந்நிலையில் முன்னணி இணைய தளத்துக்கு பேட்டியளித்திருந்தார் ஐஸ்வர்யா.
நண்பர்களின் உணவுப் பழக்கங்களை சமூக வலைதள பயனர்கள் பின்பற்றுவதாக ஆய்வில் தகவல்
அதில், விஜய்க்கு தங்கையாக நடிப்பீர்களா என்ற கேள்வி ஐஸ்வர்யாவிடம் கேட்கப்பட்டது. அதற்கு, ”இனி தங்கை சேப்டரே கிடையாது. எல்லாத்தையும் மூடி கீழ வச்சாச்சு. அதுலயும் விஜய் சாருக்கு கண்டிப்பா ஹீரோயினா தான் நடிப்பேன். குறிப்பா மன்னன் படத்துல வர்ற விஜய் சாந்தி கேரக்டர் மாதிரி, விஜய் சார் கூட நடிக்கணும்ன்னு ஆசை. இல்லன்னா எதாச்சும் ரொமாண்டிக் சப்ஜெக்ட்ல நடிக்கணும்” என்றார்.