கதைக்குள் ரஜினிகாந்த் வந்ததால், கவனம் அவர் மீது திரும்பி கதை தனது தனித்தன்மையை இழந்தது என்று லால் சலாம் தோல்விக்கு விளக்கம் அளித்திருந்த இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், இப்போது லால் சலாம் படத்தின் காட்சிகளை பலவற்றை தொலைத்துவிட்டோம் அதுதான் படத்தின் தோல்விக்கு காரணம் என்று கூறியுள்ளார்.
விக்ரந்த் – விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான படம் லால்சலாம். ரஜினிகாந்த் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த இந்த படம், விளையாட்டு மற்றும் மத நல்லிணக்கத்தை அடிப்படையாக கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்த இந்த படம், பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், வெளியான முதல் நாளே லால் சலாம் படம் படுதோல்வியை சந்தித்தது.
ஆங்கிலத்தில் படிக்க : Aishwarya Rajinikanth reveals 21 days of shooting footage of Lal Salaam went missing: ‘We salvaged with whatever was left’
இதனிடையே சமீபத்தில் தனது தோல்வியை ஒப்புக்கொண்ட இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், படத்தில் ரஜினிகாந்த் இருந்ததால் நாங்கள் அவர் கேரக்டர் மீது கவனம் செலுத்தியதால், கதை அதன் முக்கியத்துவத்தை இழந்தது. இது தான் படத்தின் தோல்விக்கு காரணம் என்று கூறியிருந்தார். மேலும் படத்தில் இடைவேளைக்கு பிறகுதான ரஜினிகாந்த் வருவதாக இருந்தது. ஆனால் அவரது ரசிகர்கள் ஏமாற்ந்துவிட கூடாது என்பதால், அவரின் காட்சிகள் படத்தின் தொடக்கத்திலேயே வருவது போல் செய்தோம்.
கடைசி இரண்டு நாளில் எடிட்டிங் டேபிளில் நான் செய்த செயல்தான் லால் சலாம் தோல்விக்கு காரணம் என்றும், படத்தின் முக்கிய கேரக்டரு செந்தில் கேரக்டர் தான். ஆனால் ரஜினிகாந்த் உள்ளே வந்ததால், படம் முழுவதும் அவர் பக்கம் திரும்விட்டது என்று கூறியிருந்தார். ஐஸ்வர்யாவின் இந்த விளக்கம் நெட்டிசன்கள் மத்தியில் கடும் விமர்சனங்களை எழுப்பிய நிலையில், தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் புதிய விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.
சமீபத்தில் சினிமா விகடனிடம் பேசிய ஐஸ்வர்யா, “ லால் சலாம் படத்தில் நாங்கள் பல காட்சிகளை தொலைத்துவிட்டோம் என்பது தான் உண்மை. இப்படி ஒரு சம்பவம் நடந்தது எங்களுக்கே அதிர்ச்சியாக இருந்தது. சுமார் 21 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. எங்களது பொறுப்பின்மைதான் காரணமாக அத்தனை காட்சிகளையும் தொலைத்துவிட்டோம். அது துரதிர்ஷ்டவசமானது. இந்த 21 நாட்களும் நாங்கள் ஒரு கிரிக்கெட் போட்டியை படமாக்கியிருந்தோம், அது ஒரு பத்து கேமரா செட்-அப். இது ஒரு உண்மையான கிரிக்கெட் போட்டி போல் படமாக்க விரும்பினோம். இருபது கேமராக்களின் காட்சிகளையும் நாங்கள் தவறவிட்டோம். கடைசி நேரத்தில் என்ன செய்வது என்று எங்களுக்குத் தெரியவில்லை. விஷ்ணு, செந்தில், அப்பா உட்பட அனைவருமே தங்கள் கெட்-அப்பை மாற்றிக்கொண்டதால் அந்த காட்சியை மீண்டும் எங்களால் படமாக்க முடியவில்லை.
கடைசியில், மீதி இருந்ததை வைத்து படத்தை மீண்டும் எடிட் செய்தோம். இது சவாலாக இருந்தது. விஷ்ணுவும் அப்பாவும் ஒத்துழைத்து, அதை மீண்டும் செய்யத் தயாராக இருந்தபோதிலும், எங்களால் அதை மீண்டும் படமாக்க முடியவில்லை. பல ஹார்ட்டிஸ்குகள் மோசமான நிலைக்கு சென்றுவிட்து என்றும், அடுத்த முறை காட்சிகளில் கவனமாக இருக்க வேண்டும் என்பது எனக்கு ஒரு பாடம் என்றும் ஐஸ்வர்ய ரஜினிகாந்த் கூறியுள்ளர். மேலும் தொலைந்து போன காட்சிகள் கிடைத்திருந்தால் படம் நன்றாக இருந்திருக்கும் என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.