அப்பாவை பின்தொடரும் மகள்... ஆன்மீகத்தில் என்ட்ரி ஆன ஐஸ்வர்யா ரஜினிகாந்த் : வைரல் போட்டோ

சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்கள் மகன்களுடன் இருக்கும் பதிவுகள் என வெளியிட்டு வருகிறார்.

சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்கள் மகன்களுடன் இருக்கும் பதிவுகள் என வெளியிட்டு வருகிறார்.

author-image
WebDesk
New Update
Rajinikanth Aishwarya

ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ரஜினிகாந்த். தற்போது வேட்டையன் படத்தில் பிஸியாக நடித்து வரும் இவர், அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171 படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ரஜினிகாந்துக்கு ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா என்று இரு மகள்கள் உள்ளனர். இவர்கள் இருவருமே திரைத்துறையை சார்ந்த பணிகளை செய்து வருகின்றனர்.

Advertisment

அந்த வகையில் தனுஷ் நடிப்பில் வெளியான 3 படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், அடுத்து வை ராஜா வை என்ற படத்தை இயக்கி இருந்தார். அதன்பிறகு பல ஆண்டுகள் இடைவெளிக்கு பின் சமீபத்தில் வெளியான லால் சலாம் படத்தை இயக்கியிருந்தார். ரஜினிகாந்த் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த இந்த படம் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி தோல்வியை சந்தித்தது.

அதேபோல் நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்துகொண்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 2 ஆண் குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த ஆண்டு கணவரை பிரிவதாக அறிவித்திருந்தார். இது தனுஷ் மற்றும் ரஜினிகாந்த் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன்பிறகு லால் சலாம் படத்தை இயக்கிய ஐஸ்வர்யாவுக்கு ஏமாற்ற ம மிஞ்சிய நிலையில், தற்போது அவர் தனது தந்தையை போலவே ஆன்மீகத்தில் இறங்கியுள்ளார்.

சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்கள் மகன்களுடன் இருக்கும் பதிவுகள் என வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது ஒரு பேப்பரில் வரிசையாக ஓம் நமச்சிவாயா என்று எழுதியுள்ளார். இது தொடர்பான போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள அவர், பறந்து சென்ற மார்ச் மாதத்தின் துளிகள் என்று பதிவிட்டுள்ளார்.

Advertisment
Advertisements

இந்த போட்டோ தற்போது வைரலாகி வரும் நிலையில், தந்தையை போலவே ஐஸ்வர்யாவும் ஆன்மீகத்தில் இறங்கிவிட்டாரா என்று கேள்வி எழுப்பி வரும் நிலையில், பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Aishwarya rajinikanth

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: