scorecardresearch

ரஜினிகாந்த் ஃபேமிலிக்கு இது மறக்க முடியாத நாள்… ஐஸ்வர்யா சொன்ன சீக்ரெட்!

ஹோலி பண்டிகையில் ரஜினி ரசிகர்களுக்கு சூப்பர் சீக்ரெட் சொன்ன ஐஸ்வர்யா ரஜினிகாந்த்; என்ன தெரியுமா?

ரஜினிகாந்த் ஃபேமிலிக்கு இது மறக்க முடியாத நாள்… ஐஸ்வர்யா சொன்ன சீக்ரெட்!

Aishwarya reveals secret for Rajinikanth fans on Holi: ஹோலி பண்டிகை தனது குடும்பத்திற்கு முக்கியமான நாள் என்றும், அது ஏன் என்பதையும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

ரஜினிகாந்தின் மகளான இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சமீபத்தில் தனது பன்மொழி இசை வீடியோவை வெளியிட்டார். இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த பல்வேறு மொழிகளுக்கான இசை வீடியோக்களை ரஜினிகாந்த், அல்லு அர்ஜுன் மற்றும் மோகன்லால் அறிமுகப்படுத்தினர்.

ஏறக்குறைய ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு இந்த இசை வீடியோவை இயக்குவதன் மூலம் ஐஸ்வர்யா மீண்டும் இயக்குனராகியுள்ளார். இதற்கு முன்னர் ஐஸ்வர்யா, தனது முன்னாள் கணவர் தனுஷை வைத்து ’3’ என்ற படத்தை இயக்கி, இயக்குனராக அறிமுகமானார். பின்னர் கெளதம் கார்த்திக்கை வைத்து ’வை ராஜா வை’ என்ற படத்தையும், சினிமா வீரன் என்ற ஆவணப் படத்தையும் இயக்கியுள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு, ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான நடிகர் ராகவா லாரன்ஸை சந்தித்த படத்தை ஐஸ்வர்யா பகிர்ந்திருந்தார். அதில், “ஏதோ சுவாரஸ்யமாக இருக்கிறது. லாரன்ஸ் அண்ணாவுடனான சந்திப்பிற்குப் பிறகு என் மூளை துடிதுடிக்கிறது. வேலை செய்யும் நிலையில் உள்ளது. எங்கிருந்தாலும் எதுவாக இருந்தாலும்!” எனப் பதிவிட்டிருந்தார்.

ராகவா லாரன்ஸின் ‘துர்கா’ படத்தை ஐஸ்வர்யா இயக்குவார் என்று கூறப்படுகிறது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது மூன்றாவது படத்திற்கான ஸ்கிரிப்டை முடித்துவிட்டதாகவும், அதில் நடிகர் சிம்பு நடிக்கவிருப்பதாகவும் திரையில் பேச்சுக்கள் உள்ளது.

இதையும் படியுங்கள்: பெரியார் மண்ணில் இந்த படத்திற்கு அனுமதி இல்லையா? பெண் இயக்குனர் கண்ணீர்

இந்தநிலையில், ​​​​ஐஸ்வர்யா தனது இன்ஸ்டாகிராமில் மார்ச் 18 அன்று ஹோலி கொண்டாடும் படத்தைப் பகிர்ந்துள்ளார் மற்றும் அதில் ரஜினிகாந்த் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஏன் ஹோலி சிறப்பானது என்று கூறியுள்ளார். ஹோலி தினத்தன்று தனது தந்தைக்கு ரஜினிகாந்த் என்று கே பாலச்சந்தர் பெயரிட்டதை குறிப்பிட்டுள்ள அவர், அந்த பண்டிகை தனது குடும்பத்திற்கு முக்கியமானது என்று விளக்கியுள்ளார்.

ஐஸ்வர்யா தனது பதிவில், “நிறங்கள் இல்லாத வாழ்க்கை என்ன? ஹோலி எங்கள் குடும்பத்திற்கு கூடுதல் சிறப்பு, ஏனென்றால் ‘சிவாஜி’க்கு ‘ரஜினிகாந்த்’ என்று இந்த நாளில் எங்கள் அன்பான கே பாலசந்தர் தாத்தா பெயரிட்டார்… உங்களுக்கு ஹோலி வாழ்த்துக்கள்… இந்த வண்ணங்களை நாளை கழுவி விடுங்கள், ஆனால் எப்போதும் புன்னகையுடன் இருங்கள்…” என்று பதிவிட்டுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Aishwarya reveals secret for rajinikanth fans on holi