3, வை ராஜா வை படங்களுக்குப் பிறகு, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் படம், ‘லால் சலாம்'. கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படத்தில் ரஜினிகாந்த் கவுரவ வேடத்தில் நடிக்கிறார்.
Advertisment
விஷ்ணு விஷால், விக்ராந்த் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். முன்னாள் ஹீரோயின் ஜீவிதா, ரஜினியின் தங்கையாக நடிக்கிறார். செந்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். லைகா இப்படத்தை தயாரிக்கிறது.
இப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நடந்து வந்தது. தற்போது இதன் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகிறது.
சமீபத்தில், லால் சலாம் படத்திலிருந்து ரஜினிகாந்த் போஸ்டரை படக்குழு வெளியிட்டது. இதில், மொய்தீன் பாய் எனும் கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார். மேலும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார்.
Advertisment
Advertisements
மும்பையில் நடைபெற்ற ‘லால் சலாம்’ படப்பிடிப்புத் தளத்தில் ரஜினிகாந்தும், கபில்தேவும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகியது.
It is my honour and privilege working with the Legendary, most respected and wonderful human being Kapildevji., who made India proud winning for the first time ever..Cricket World Cup!!!#lalsalaam#therealkapildevpic.twitter.com/OUvUtQXjoQ
இந்த படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த ரஜினிகாந்த், ”முதன்முறையாக உலகக் கோப்பை வென்று இந்தியாவை பெருமைப்படுத்திய மரியாதைக்குரிய, அற்புதமான மனிதர் கபில்தேவுடன் இணைந்து பணியாற்றுவதை பெருமையாகவும், கவுரவுமாகவும் கருதுகிறேன்”. என பதிவிட்டுள்ளார்.
மேலும் ஐஸ்வர்யாவும், படப்பிடிப்பின் போது எடுத்த படங்களை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார்.