Advertisment

நடிப்பில் அசத்திய பிரியா பவானி சங்கர்; ஹாரர் ரசிகர்களை ஈர்த்ததா ’டிமான்டி காலனி’?

விறுவிறுப்பான திரைக்கதை, பயமுறுத்தும் காட்சிகள்; மிரட்டிய அஜய் ஞானமுத்து; டிமான்டி காலனி திரை விமர்சனம்

author-image
WebDesk
New Update
demonte colony

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டில் வெளியான "டிமான்டி காலனி" படத்தின் இரண்டாவது பாகம் அருள்நிதி, பிரியா பவானி ஷங்கர், அருண் பாண்டியன் ஆகியோர் நடிப்பில் இன்று வெளியாகியுள்ளது. அதன் முழுமையான விமர்சனத்தை இங்கே காணலாம் 

Advertisment

கதைக்களம்:

"டிமான்டி காலனி 1" படம் முடிந்த இடத்தில் இருந்து இரண்டாம் பாகம் துவங்குகிறது. கதாநாயகன் அருள்நிதி முதல்பாகத்தில் இறப்பது போல கதை முடியும் அதன்பின் என்ன நடக்கிறது என்பதை வைத்து கதை நகர்கிறது.

இதற்கிடையே குடும்பத்தை எதிர்த்து காதல் திருமணம் செய்து கொள்கிறார் நாயகி பிரியா பவானி சங்கர், அதன்பிறகு சில காரணங்களால் தற்கொலை செய்து கொள்ள, அவரின் நினைவாக ஒரு உணவகத்தை தொடங்கி நடத்தி வருகிறார். ஆனால் அங்கு சில அமானுஷிய நிகழ்வுகள் நடைபெறுகிறது. இந்த இரண்டிற்கும் என்ன தொடர்பு, அதன்பின் நடக்கும் மர்மங்களே படத்தின் மீதி கதை 

நடிகர்களின் நடிப்பு:

நாயகன் அருள்நிதி புதுமைகள் ஏதும் இன்றி தன் வழக்கமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். படத்தை தன் தோள்களில் சுமந்திருப்பது நாயகியான ப்ரியா பவானி சங்கர் தான். கடந்த சில படங்களாக விமர்சனங்களுக்கு உள்ளான பிரியா இப்படத்தில் அதற்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார். அவரின் நடிப்பு அருமை. மேலும் முத்துக்குமார், அருண் பாண்டியன், அர்ச்சனா, செரிங் டோர்ஜி ஆகியோரின் நடிப்பும் அபாரம்.

இயக்கம் மற்றும் இசை:

தமிழ் சினிமாவில் பொதுவாகவே பேய் படங்களின் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டால், அது முதல் பாகத்தில் இருந்து முற்றிலும் வேறுபட்ட கதையாகவே இருக்கும். அதுமட்டுமல்லாமல் தற்போது வரும் பேய் படங்கள் எல்லாம் காமெடி, கிளாமர், ஆடல், பாடல் என ஜனரஞ்சகமாகவே இருக்கிறது ,அதிலிருந்து முற்றிலும் வேறுபட்டு ஒரு தரமான பேய்ப்படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் அஜய் ஞானமுத்து. முதல் பாகத்தையும் இரண்டாம் பாகத்தையும் இணைத்திருக்கும் விதம் சிறப்பு.

திரில்லர் படங்கள் என்றாலே கண்ணை மூடிக்கொண்டு இயக்குனர்கள் சாம் சி.எஸ்.சி.,டம் செல்கிறார்கள். அது ஏன் என்பதை இப்படத்தின் மிரட்டலான பின்னணி இசை உங்களுக்கு புரிய வைக்கும். பின்னணி இசை பல இடங்களில் நம்மை பயமுறுத்தும் என்பது உறுதி.

படத்தின் பிளஸ்:

⦿ விறுவிறுப்பான திரைக்கதை 

⦿ பயமுறுத்தும் காட்சிகள் 

⦿ இரண்டு பாகத்தையும் இணைத்திருக்கும் விதம் 

⦿ பார்ட் 3க்கான தொடக்கம் 

⦿ லாஜிக் மீறாத திரைக்கதை 

படத்தின் மைனஸ்:

⦿ VFX காட்சிகள் 

⦿ யூகிக்கக்கூடிய சில ட்விஸ்ட் 

மொத்தத்தில் ஹாரர் ரசிகர்களுக்கு இப்படம் மிகப்பெரிய திருப்தியை கொடுக்கும். 

விமர்சனம் - நவீன் சரவணன்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Arulnithi Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment