ரஹானேவுக்கு அஸ்வின் ரெக்கமெண்ட் செய்த தமிழ் சினிமா

Ajinkya Rahane impressed by Soorarai Potru Surya ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தைத் தான் பார்த்ததாகவும், சூரியாவின் நடிப்பில் ஈர்க்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

Ajinkya Rahane impressed by Soorarai Potru Surya Ashwin recommends Master Tamil News
Ajinkya Rahane impressed by Soorarai Potru Surya

Rahane about Suriya’s Soorarai Potru Tamil News : இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இந்திய கிரிக்கெட் வீரர் அஜிங்க்யா ரஹானே, சூரரைப் போற்று திரைப்படத்தில் சூர்யாவின் நடிப்பில் ஈர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

பிப்ரவரி 5 முதல், முதலாவது டெஸ்ட் போட்டி எம்.ஏ.சிதம்பரம் மைதானத்திலும், பிப்ரவரி 13 முதல் இரண்டாவது போட்டி என இரண்டு போட்டிகளுக்குமான தீவிர பயிற்சியில் மற்ற இந்திய கிரிக்கெட் வீரர்களோடு ரஹானேவும் மேற்கொண்டு வருகிறார். இரு அணிகளும் பிப்ரவரி 2 முதல் பயிற்சி தொடங்குவதற்கு முன்பு ஆறு நாட்கள் தனிமைப்படுத்தலில் உள்ளன. இந்நிலையில், சமீபத்தில் ரசிகர்களுடன் ஆன்லைன் உரையாடலில் ஈடுபட்ட ரஹானே, சூரியா நடித்த ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தைத் தான் பார்த்ததாகவும், சூரியாவின் நடிப்பில் ஈர்க்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

உரையாடலின்போது ரசிகர் ஒருவர் ஏதேனும் தமிழ்த் திரைப்படம் பார்த்திருக்கிறீர்களா என்று கேட்டதற்கு, “ஆம், சூரரைப் போற்று’ திரைப்படம் சப்டைட்டிலுடன் பார்த்தேன். அதில் சூர்யாவின் நடிப்பு அற்புதமாக இருந்தது. எனக்கு மிகவும் பிடித்திருந்தது” என்று பதில் கூறியுள்ளார். மேலும், நட்சத்திர கிரிக்கெட் வீரர் இந்திய ஆஃப் ஸ்பின்னர் அஸ்வின் ரவிச்சந்திரனிடம் தமிழ்த் திரைப்படத்திற்கு வேறு பரிந்துரைகளையும் கேட்டுள்ளார் என்றும் அதற்கு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படத்தைப் பரிந்துரை செய்திருப்பதாகவும் ரஹானே கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Ajinkya rahane impressed by soorarai potru surya ashwin recommends master tamil news

Next Story
நடிகன் என்பதைவிட தமிழன் என்பதே பெருமை: சத்யராஜ்! பாகுபலி-2 வெளிவர சிக்கல் இல்லை!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com