ஆஸ்திரேலியாவில் தக்‌ஷா ஜெயித்தே ஆக வேண்டும்… மாணவர்களுடன் களத்தில் இறங்கிய ’தல ’அஜித் !

அஜித்தின் துணையுடன் வெற்றி பெறுவோம் என நம்பிக்கையுடன் இருக்கிறது

By: Updated: September 11, 2018, 04:36:10 PM

ஆஸ்திரேலியாவில் நடக்கும் போட்டியில், ஜெயித்தே ஆக வேண்டும் என்ற எண்ணத்துடன், நடிகர் தக்‌ஷா குழு அராய்ச்சி மாணவர்களுடன் களத்தில் இறங்கியுள்ளார்.

தக்‌ஷா குழு:

நடிகர் அஜித் குமார், பள்ளிப் பருவத்திலிருந்தே ஏரோ மாடலிங் (aero-modelling) தயாரிப்புகளில் அதிக ஆர்வம் காட்டியவர். இந்த ஆர்வத்தினால், பல ஆண்டுகளாக ரிமோட் கண்ட்ரோல் வாகனங்களை வடிவமைத்து உருவாக்கும் செயலில் ஈடுபட்டிருந்தார்.

இந்நிலையில், கடந்த மே மாதம் எம்.ஐ.டி-ல் உள்ள ‘தக்‌ஷா’ என்ற மாணவர்கள் அணியுடன் அஜித் இணைந்தார். ஆளில்லா வான்வழி வாகனம் சேலஞ்சில் ‘தக்‌ஷா’அணி ஈடுபட்டுள்ளது. இவர்களுக்கு உதவவும், தயாரிக்கும் முறைகள் பற்றி கற்றுத்தரவும் தன்னார்வத்துடன் நடிகர் அஜித் பங்கேற்றார்.

அவரது மேற்பார்வையில் விமானம் இயக்கும் நுட்பங்களை பயின்ற தக்‌ஷா மாணவ அணியினர், 6 மணிநேரம் வானில் பறக்கக்கூடிய ஆளில்லா விமானத்தை உருவாக்கினர்.

இது உலகிலேயே அதிக நேரம் பறக்கக் கூடிய ஆளில்லா விமானம் என்ற உலக சாதனை படைத்தது.  இந்த பிரிவில் கல்லூரி அளவில் நடத்தப்பட்ட போட்டியில் பங்கேற்று அஜித்தின் தக்‌ஷா அணி முதல் இடத்தையும் தட்டிச் சென்றது.
இந்நிலையில் மருத்துவ பயன்பாட்டுக்கான ஆளில்லா சிறிய ரக விமானங்களை வடிவமைப்பதற்கான போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது.

இந்த போட்டியிஉல் வெற்றியை வசப்படுத்த நடிகர் அஜித் மாணவர்களுடன் பயிற்சியில் ஈடுப்பட்டு வருகிறார். இந்த புகைப்படங்கள்  சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. . சர்வதேச அளவில் நடைபெறும் இந்தப் போட்டியில் அஜித்தின் துணையுடன் வெற்றி பெறுவோம் என நம்பிக்கையுடன் இருக்கிறது அண்ணா பல்கலைகழக மாணவரணி.

பல சாகசங்களை தக்‌ஷா படைத்து வருவதால் அஜித்துக்கு உரிய அங்கிகாரம் கிடைக்கும் வகையில் விருது வழங்க வலியுறுத்தப்பட்டு வருகின்றது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Ajith and anna university team

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X