New Update
/indian-express-tamil/media/media_files/tuncZHl4KipUFsNHnDor.jpg)
விடாமுயற்சி’ படத்தின் புதிய போஸ்டர்
அஜித் நடிக்கும் ‘விடாமுயற்சி’ படத்தி அஜித் - திரிஷா சிரித்தபடி ஜோடியாக போஸ் கொடுக்கும் புதிய போஸ்டரை படக்கு வெளியிட்டுள்ளது. இந்தப் போஸ்டர் அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பரப்பி வைரலாக்கி வருகின்றனர்.
விடாமுயற்சி’ படத்தின் புதிய போஸ்டர்
தமிழ் சினிமாவின் முன்னனி நடிகராக வலம் வரும் அஜித்குமார் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசை அமைக்கிறார்.
விடாமுயற்சி படத்தில் அஜித் உடன் நடிகை திரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உட்பட பலர் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்றது. சில மாதங்களுக்கு முன், அஜர்பைஜானில் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பில், அஜித் ஜீப் ஓட்டிச் செல்ல, அருகே ஆரவ் அமர்ந்திருக்க ஜீப் கவிழ்ந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனிடையே, அஜித் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் ‘குட் பேட் அக்லி’ படத்தில் கமிட் ஆகி படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.
இந்தப் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதை அடுத்து ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது.
அண்மையில், விடாமுயற்சி படத்தின் முதல் தோற்ற போஸ்டரை படக்குழு அண்மையில் வெளியிட்டது. அந்த போஸ்டர் வடிவமைப்பு மிகவும் ‘சிம்பிளாக’ இருந்ததாக சமூக வலைதளங்களில் விமர்சனங்களில் பேசப்பட்டது.
இந்நிலையில், அஜித் - திரிஷா சிரித்தபடி ஜோடியாக போஸ் கொடுக்கு‘விடாமுயற்சி’ படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
#VidaaMuyarchi 🌟🧿#EffortsNeverFail pic.twitter.com/mTvEtUHuEN
— Trish (@trishtrashers) July 19, 2024
இந்த போஸ்டரில், அஜித் கண்ணாடி அணிந்து இளமையாக தோற்றமளிக்கிறார். திரிஷா புன்னகையுடன் அமர்ந்திருக்க, அஜித் பின்னால், நின்று சிரித்தபடி இளமையான தோற்றத்தில் இருக்கிறார். விடாமுயற்சி படத்தின் இந்த புதிய போஸ்டர் மாஸாக இருக்கிறது என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பரப்பி வைரலாக்கி வருகின்றனர்.
அதே நேரத்தில், விடாமுயற்சி படத்தின் போஸ்டரில் அஜித் - திரிஷா இருவரின் தோற்றத்தைப் பார்த்த பார்த்த நெட்டிசன்கள் விண்டேஜ் ஜோடி போல இருக்கிறார்கள் என்று கம்மெண்ட் செய்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.