Advertisment

3.51 கோடிக்கு கார்: மாஸாக போஸ் கொடுத்த அஜித்; ஷாலினி வைரல் க்ளிக்

ஷாலினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சொகுசு காரின் அருகில் அஜித் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

author-image
WebDesk
New Update
Ajith New Car

கார் மற்றும் பைக் பிரியரான நடிகர் அஜித் குமார் தனது கார்களின் பட்டியலில் புதிதாக போர்ஸ்ச் ஜி.டி3 ரக காரை சேர்த்துள்ளார். இந்த காரில் இருந்து அஜித் போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை அவரது மனைவி ஷாலினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Advertisment

Read In English: Ajith buys Porsche worth Rs 3.51 crore, Shalini says ‘He has got the car, the style, and my heart’

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் முக்கியமானவரான அஜித் குமார் தற்போது விடா முயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரு படங்களில் நடித்து வருகிறார். இந்த இரு படங்களின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அஜித் குமார் தற்போது புதிய ரக கார் ஒன்றை வாங்கியுள்ளார்.  இந்தத் தகவலை அவரது மனைவி ஷாலினி தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஷாலினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படத்தில், சொகுசு காரின் அருகில் அஜித் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த பதிவில்,“அவருக்கு கார், ஸ்டைல் மற்றும் என் இதயம் கிடைத்துவிட்டது” என்று பதிவிட்டுள்ளார். இந்த போட்டோ போர்ஷோ ஷோரூமில் இருந்து எடுக்கப்பட்டது. அஜித் இந்த போட்டோவில் சாதாரணமாக இருக்கிறார்.

போர்ஸ்ச் (Porsche 911) 911 வரிசையில் போர்ஸ்ச்  ஜி.டி 3 (Porsche GT3 RS) பெட்ரோல் வகையானது. இதன் விலை ரூ.3.51 கோடி ஆகும். அஜித் கார் மற்றும் பைக் பிரியர். அவர் அடிக்கடி பல்வேறு பைக் சுற்றுலா செல்லும் தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் வெளியாவதை அதிகம் பார்த்திருக்கிறோம். ஆகஸ்ட் மாதத்தில் ஃபெராரி காரை ரூ 9 கோடிக்கு வாங்கினார், சிவப்பு ஃபெராரியில் பயணம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

கார்கள் மட்டுமின்றி, பைக்குகள் மீதும் ஆர்வம் கொண்ட அஜித், BMW S 1000 RR, BMW K 1300 S, Aprilla Caponord 1200 மற்றும் Kawasaki Ninja ZX-145 உள்ளிட்ட பல ரக பைக்குகள் வைத்திருக்கிறார், அஜித் சமீபத்தில் தனது விடா முயற்சி படத்தின் படப்பிடிப்பை முடித்திருக்கிறார். மகிழ் திருமேனி இயக்கியுள்ள இப்படத்திற்கு இன்னும் ரிலீஸ் தேதி கிடைக்கவில்லை. தற்போது இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடித்து வருகிறார். இப்படம் 2025 பொங்கலுக்கு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Ajithkumar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment