Advertisment

அஜித்தின் ட்ரோன் செஷன்: வைரலாகும் வீடியோ!

கொரோனா தொற்றுநோய் காரணமாக இந்தப் படத்தின் படபிடிப்பும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் அப்டேட்டுக்காக மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறார்கள் ரசிகர்கள். 

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Ajith Drone Session, Aero modelling

Ajith Drone Session, Aero modelling

அஸ்வின் காகுமனு ஒரு பிரபலமான தமிழ் நடிகர். அடுத்ததாக இயக்குநர் மணி ரத்னத்தின் மகத்தான ப்ராஜெக்டான, ’பொன்னியின் செல்வன்’ படத்தில் கமிட்டாகியிருக்கிறார். சிறந்த தமிழ் திரைப்படங்களின் மூலம், குறிப்பாக மங்காத்தாவில் நன்கு அறியப்பட்ட நடிகராக மாறினார். தற்போது அவர் அஜித்தின் த்ரோபேக் வீடியோவைப் பகிர்ந்துள்ளார், (மங்காத்தா நாட்களில் எடுக்கப்பட்டிருக்கும் எனத் தோன்றுகிறது)

Advertisment

அமிதாப்-அபிஷேக் உடல்நிலை: தீவிர சிகிச்சை தேவையில்லை – மருத்துவமனை வட்டாரம்

அது ஒரு ட்ரோனின் ஏரோ-மாடலிங் அமர்வின் வீடியோ. இது குறித்து, "பறக்க கற்றுக்கொள்வது... பல ஆண்டுகளுக்கு முன்பு, அஜித் சார் மற்றும் அரவிந்த் சார் (தீனா படத்தின் ஒளிப்பதிவாளர்) ஆகியோருடன் ஏரோ மாடலிங் அமர்வுகளில் சேர எனக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த சிறிய வீடியோ அந்த அமர்வின் ஒரு பார்வை.” எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த வீடியோ தற்போது அஜித் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

ஹெச்.வினோத் இயக்கி, போனி கபூர் தயாரித்திருந்த ’நேர்கொண்ட பார்வை’யில், அஜித் கடைசியாக நடித்திருந்தார். இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றதோடு, பார்வையாளர்களிடமிருந்தும் விமர்சகர்களிடமிருந்தும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிக்கும் 'வலிமை' படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். கொரோனா தொற்றுநோய் காரணமாக இந்தப் படத்தின் படபிடிப்பும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் அப்டேட்டுக்காக மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.

இந்தியாவில் 10 பில்லியன் டாலர் முதலீடு செய்ய முடிவு – கூகுள்

இப்படத்தை ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா படமாக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

 

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Ajith Thala Ajith
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment