Advertisment

ஆபாசமாக டுவிட் செய்த அஜித் ரசிகர்கள்; அம்மா, சகோதரியிடம் போய் கேளுங்கள் என தெறிக்கவிட்ட கஸ்தூரி

அஜித் ரசிகர்கள் என்கிற பெயரில் டுவிட்டரில் ஆபாசமாக பேசியவர்களை நடிகை கஸ்தூரி கடுமையாக கண்டித்து பதிவிட்டதால் அஜித் ரசிகர்களுக்கும் நடிகை கஸ்தூரிக்கும் இடையே ஏற்பட்ட சண்டையால் டுவிட்டர் களேபரமானது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ajith fans vs actress kasthuri, ajith fans vs kasthuri, அஜித் ரசிகர்கள், கஸ்தூரி, actress kasthuri, ajith fans, dirty ajith fans, ajith fans vs actress kasthuri controversy

ajith fans vs actress kasthuri, ajith fans vs kasthuri, அஜித் ரசிகர்கள், கஸ்தூரி, actress kasthuri, ajith fans, dirty ajith fans, ajith fans vs actress kasthuri controversy

அஜித் ரசிகர்கள் என்கிற பெயரில் டுவிட்டரில் ஆபாசமாக பேசியவர்களை நடிகை கஸ்தூரி கடுமையாக கண்டித்து பதிவிட்டதால் அஜித் ரசிகர்களுக்கும் நடிகை கஸ்தூரிக்கும் இடையே ஏற்பட்ட சண்டையால் டுவிட்டர் களேபரமானது.

Advertisment

நடிகர் அஜித் ரசிகர்கள் என்ற பெயரில் சிலர் டுவிட்டரில் ஆபாசமாக பேசியுள்ளனர். இதைப் பார்த்து கோபமடைந்த நடிகை கஸ்தூரி அவர்களின் டுவிட்களை ஸ்கிரீன் ஷாட் செய்து, அவற்றை தனது டுவிட்டர் பக்கத்தில் அவர்களுக்கு காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார். அதில் அவர், “மாட்டுக்கு சூடு, மனுஷனுக்கு சொல்லு. பீ தின்னும் புழுவுக்கு என்ன செய்வது? அஜித் ரசிகன்னு பீத்தி அவர் பேரை ரிப்பேர் ஆக்காதீங்கடா. பொண்ணு வேணும்னா எதுக்கு வெளியில தேடுறீங்க? உங்க அம்மா சகோதரி கிட்டே போயி கேளுங்க. #dirtyAjithFans” என்று டுவிட் செய்தார்.

publive-image

யாரோ ஒரு சிலர் அஜித் ரசிகர்கள் என்கிற பெயரில் தவறு செய்ததற்கு இப்படி ஒட்டுமொத்த அஜித் ரசிகர்களையும் வசைபாடுவதா என்று அஜித் ரசிகர்கள் கஸ்தூரியிடம் கேள்வி எழுப்பினர். அதோடு, அஜித் ரசிகர்களை திட்டிய கஸ்தூரியை கண்டிக்கும் வகையில், அஜித் ரசிகர்கள் #DirtyKasthuriAunty என்கிற ஹேஷ்டேக் செய்து டுவிட்டரில் தேசிய அளவில் டிரெண்ட் செய்தனர்.

டுவிட்டரில் #DirtyKasthuriAunty என்கிற ஹேஷ்டேக் திடீரென டிரெண்ட் ஆனதால் பலரும் என்ன என்று தெரியாமல் இணையத்தில் தேடத் தொடங்கினர்.

நடிகை கஸ்தூரி, ஆபாசமாக பேசியவர்களை சும்மா திட்டியதோடு விட்டுவிடாமல், அதில் மிகவும் ஆபாசமாக பேசிய சிலரின் டுவிட்டர் பேச்சுகளை காப்பி செய்து டுவிட்டர் நிர்வாகத்திடம் புகார் அளித்தார். மேலும், இப்படி அநாகரிகமாகவும் ஆபாசமாகவும் பேசியவர்களின் டுவிட்டர் பதிகளை காப்பி செய்து புகார் அளிக்குமாறு கஸ்தூரி தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

டுவிட்டரில் #DirtyKasthuriAunty என்கிற ஹேஷ்டேக் திடீரென டிரெண்ட் ஆனதைப் பார்த்து மேலும் கோபமடைந்த கஸ்தூரி, “ #dirtyajithfan டர்டி அஜித் ரசிகர்களைப் பார்த்து பெருமைப்படுகிறேன். டுவிட்டரில் பாலியல் தாக்குதல், நெகட்டிவ் டேகிங் செய்வது இது தான் அவர்களின் ஒரே வேலையா? தவறு செய்பவர்களை தடுத்து நிறுத்துவதற்குப் பதிலாக நீங்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து கொண்டு வசைபாடுகிறீர்கள். நீங்கள் எவ்வளவு பிரயோஜனம் இல்லாதவர்கள் என்பதை நிரூபித்துள்ளீர்கள். #தமிழகத்தின்_தலயெழுத்து #தலவலி” என்று டுவிட் செய்தார்.

தோசை வெறியர்களுக்காகவே ஒரு கடை! சென்னையில் எங்க இருக்குது 'தோச மாமா’கடை?

டுவிட்டரில், இப்படி நடிகை கஸ்தூரிக்கும் அஜித் ரசிகர்களுக்கும் இடையேயான சண்டையால் சில மணி நேரம் டுவிட்டர் களேபரமாக காணப்பட்டது.

Ajith Kasthuri
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment