Advertisment

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்; அடுத்த ‘பொங்கல் நம்மள்து’ ரசிகர்கள் கொண்டாட்டம்!

அஜித்குமார் நடிக்கும் ‘குட் பேட் அக்லி’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் அவருடைய ரசிகர்கள் போஸ்டரை பகிர்ந்து, அடுத்த பொங்கல் ‘நம்மள்து’ என்று கொண்டாடி வருகின்றனர்.

author-image
WebDesk
New Update
ajith good bad ugly

அஜித்குமார் நடிக்கும் ‘குட் பேட் அக்லி’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் அஜித்குமார் நடிக்கும் ‘குட் பேட் அக்லி’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் அவருடைய ரசிகர்கள் போஸ்டரை பகிர்ந்து, அடுத்த பொங்கல்  ‘நம்மள்து’ என்று கொண்டாடி வருகின்றனர்.

Advertisment

தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திர நடிகர்களில் ஒருவரான நடிகர் அஜித் குமார் நடிக்கும், ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் ஞாயிற்றுக்கிழமை (மே 19) வெளியிட்டுள்ளனர்.

அஜித்தின் 63-வது படமாக ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தை ‘மார்க் ஆண்டனி’ பட இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். இந்த படத்தை மைத்திரி மூவி மேக்கர்ஸ் படத்தை தயாரிக்கிறது. இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், ‘குட் பேட் அக்லி’ படத்தின் ஃபர்ஸ்லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. இது படத்தின் தலைப்புக்கு ஏற்றவாறு அமைந்துள்ள இந்த போஸ்டரில், நல்லவன், கெட்டவன் மற்றும் அக்லி என மூன்றையும் பிரதிபலிக்கும் வகையில் போஸ்டர் உள்ளது.

இந்த போஸ்டரில், அஜித் துப்பாக்கிகள் வைக்கப்பட்டுள்ள மேசை ஒன்றில் கை வைத்து நிற்கிறார். அஜித் பச்சை நிறத்திலான சட்டை அணிந்துள்ளார். கைகள் முழுவதும் டாட்டூ வரையப்பட்டுள்ளது. சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் கேமராவைப் பார்த்தபடி நிற்கிறார். அவருக்கு இடப்பக்கம் உள்ள அஜித் கெட்டவன் போலவும், வலப்பக்கம் உள்ள அஜித் அக்லியாகவும் செய்கை செய்கின்றனர்.

“இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ஃபேன் பாயாக மட்டுமல்லாமல், ஃபேன் பாய் இயக்குநராகவும் தருகிறேன். யுனிவர்ஸுக்கும், கடவுளுக்கும் நன்றி” என இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். அதோடு, குட் பேட் அக்லி படம் 2025-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதும் அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். அடுத்த ஆண்டு பொங்கலுக்கு‘குட் பேட் அக்லி’ திரைப்படம் வெளியாகும் என்பதால் அடுத்த ஆண்டு பொங்கல் நம்மள்து என்று கொண்டாடி வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Ajith
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment