பேட்மிண்டன் வீராங்கனை பி.வி சிந்துவுக்கு வெங்கட தத்தா சாய் என்பவருக்கும் கடந்த டிச.22-ம் தேதி தெலுங்கு பாரம்பரிய முறைப்படி உதய்பூரில் திருமணம் நடைபெற்றது. வெங்கட தத்தா சாய் போசிடெக்ஸ் டெக்னாலஜிஸ் என்ற நிறுவனத்தில் நிர்வாக இயக்குநராக உள்ளார். இவர்களின் திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மட்டும் பங்கேற்றிருந்தனர்.
இந்நிலையில், இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஐதராபாத்தில் நேற்று (டிச.24) நடைபெற்றது. இதில் அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், திரைப்பிரபலங்கள் உள்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், நடிகர் அஜித்குமார் மனைவி ஷாலினி, மகன் ஆத்விக் மற்றும் மகள் அனோஷ்கா உடன் குடும்பத்துடன் கலந்துகொண்டார். இதில் அஜித் கருப்பு நிற கோட் சூட் உடன் காணப்பட்டார்.
அதோடு நடிகர்கள் சிரஞ்சீவி, நாகார்ஜுனா அக்கினேனி மற்றும் நடிகை மிருணாள் தாகூர் ஆகியோரும் பங்கேற்றுள்ளனர். நடிகர் அஜித்குமார் தற்போது விடாமுயற்சி, குட் பேட் அக்லி படங்களில் நடித்து வருகிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“