அஜித் நடிக்கும் விவேகம் பட வேலைகள் முடிந்துவிட்டதாக, படத்தின் இயக்குநர் சிவா அறிவித்துள்ளார்.
நடிகர் அஜித் நடிக்க இயக்குநர் சிவா இயக்கத்தில் உருவாகி வரும் படம் விவேகம். தமிழ் திரையுலகில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சத்திய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் விவேக் ஓப்ராய், காஜல் அகர்வால், அக்சரா ஹாசன் மற்றும் பலர் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு வெளிநாடுகளில் நடைபெற்றது.
/tamil-ie/media/media_files/uploads/2017/07/vivekam-director-tweet-300x53.png)
ஜூன் 1ம் தேதி முதல் படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியது. முன்னதாக வெளியான படத்தின் டீசரை யூடியூப்பில் 15 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். இது மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது.
இந்த படத்தை வாங்குவதற்கு வினியோகஸ்தர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவியது. படத்தின் அனைத்து ஏரியாக்களையும் தயாரிப்பாளர் தரப்பு விற்றுவிட்டதாக தெரிகிறது. படம் வெளியாகும் தேதி குறித்து இதுவரையில் தயாரிப்பாளர் தரப்பில் இருந்து இன்னமும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவரவில்லை.
இந்நிலையில் படத்தின் இயக்குநர் சிவா, தனது ட்விட்டர் பக்கத்தில், ‘விவேகம் படத்தின் பட வேலைகள் முழுவதுமாக கடவுள் அருளால் நல்லபடியாக முடிந்துவிட்டது. தலரசிகர்கள், மீடியா நண்பர்கள், சினிமா காதலர்கள், என்னுடைய டீம் மற்றும் குடும்பத்தினருக்கும் நன்றி என்று பதிவிட்டுள்ளார்.
பட வேலைகள் முடிந்ததாக இயக்குநர் சிவா அறிவித்ததைத் தொடர்ந்து படத்தில் நடித்து வரும் அக்சரா ஹாசன், தனது மகிழ்ச்சியை டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். உலகத்திலேயே அதிக ஹார்ட் ஒர்க் பண்ணும் டீம் இதுதான் என்றும் பாராட்டியுள்ளார். அதோடு இந்த படத்தில் நடித்ததன் மூலம் என்னுடைய திரையுலக பயணம் வளர்ச்சி அடையும் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
விவேகம் படத்தில் வேலைப்பார்த்தது மறக்க முடியாத அனுபவம் என்று படத்தில் நடித்துள்ள இந்தி நடிகர் விவேக் ஒப்ராய் ட்விட்டர் பக்கத்தில் கருத்துச் சொல்லியுள்ளார். அதோடு, அஜித் அண்ணனுக்கும் விவேகம் டீமுக்கும் பாராட்டுகளை தெரிவித்துள்ளார். தல ரசிகர்களுக்கு கவுண்ட் டவுண் ஆரம்பித்துவிட்டது என்றும் சொல்லியுள்ளார்.
ஓராண்டுகளாக தயாரிப்பில் இருந்த இந்த படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகலாம் என்று சினிமா வட்டாரங்களில் பரபரப்பாக பேச்சு உள்ளது.