”அஜித்திற்கு நான் பிரின்ஸிபாலில்லை”: சூடான விஷால்!!!

அஜித் ஏன் போராட்டத்தில் கலந்துக் கொள்ளவில்லை

நடிகரும்,  தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால்,  ’தல’ அஜித்  குறித்து  அளித்துள்ள பதில்கள்  பிரபலங்கள் மற்றும் ரசிகர்களிடம்  பெரும்  சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

காவிரி  பிரச்சனை, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று தமிழகத்தில் நிலவும்  பிரச்சனைகளுக்கு தங்களின் ஆதரவை தெரிவிக்கும் வகையில், திரை உலகினர் கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி  சென்னை வள்ளுவர் கோட்டத்தில்  மவுன போராட்டம் நடத்தினர்.

நடிகர் சங்க தலைவர் நாசர் தலைமையில் நடந்த  இந்த போராட்டத்தில் நடிகர்கள் விஜய், ரஜினிகாந்த், சூர்யா, சிவகார்த்தியேகன் உட்பட பல நடிகர்கள் கலந்துக் கொண்டனர்.   ஆனால், போராட்டத்தில் கலந்துக் கொண்டவர்களை விட, கலந்துக் கொள்ளாத நடிகர், நடிகைகள் பக்கம் தான் அனைவரின் கவனமும்  திரும்பியது.  குறிப்பாக  நடிகர் அஜித்.

தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட ரசிகர்களை வைத்திருக்கும் அவர், மக்களுக்கான போராட்டத்தில் கலந்துக் கொள்ளாத பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. பலரும் பல்வேறு சர்ச்சைகளை  அஜித் மீது வைத்தனர். இந்நிலையில், நடிகர் விஷாலிடம் இதுக் குறித்த கேள்விகள் கேட்கப்பட்டன.

இதற்கு பதில் அளித்துள்ள விஷால், அஜித் குறித்து ஏகப்பட்ட கருத்துகளை பதிவு செய்துள்ளார். இந்த இண்டர்வியூவில்  விஷால் அளித்துள்ள பதில்கள்  தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.

கேள்வி 1. அஜித்திடன் உங்களுக்கு பிடிக்காத விஷயம்?

விஷாலின் பதில்: அஜித்திடம் எனக்குப் பிடிக்காத ஒன்று, எப்போதுமே அவரை தொடர்புக் கொள்ள முடியாது.  நான் இதுவரை பலமுறை தொடர்புக் கொள்ள முயற்சித்திருக்கிறேன். ஆனால்,  எல்லாமே தோல்வியில் தான் முடிந்துள்ளது. சமீபத்தில் அவரின் பிஆர்ஓ சுரேஷ் சந்திராவை  கூட தொடர்புக் கொள்ள முயற்சித்தேன். பல பிரச்னைகள் தமிழ் சினிமாவில் நடந்து வரும் நிலையில் அவர் வாய் திறக்காதது சற்று ஏமாற்றம் அளிக்கிறது.

 கேள்வி 2. மவுன போராட்டத்தில் அஜித் கலந்துக் கொள்ளாதது பற்றி உங்கள் கருத்து? 

விஷாலின் பதில்:  நான் ஒன்னும்  ஸ்கூல் பிரின்ஸிபால் கிடையாது. மாணவர்கள் எல்லோரும் கட்டாயமாக வர வேண்டும் என்று உத்தரவு விடுக்க. அவரவர்களின் விருப்பம். அஜித் ஏன் போராட்டத்தில் கலந்துக் கொள்ளவில்லை என்று நீங்கள் அஜித்திடம் தான் கேட்க வேண்டும்.

விருப்ப இருந்த  மற்ற நடிகர், நடிகைகள் அவர்களாகவே வந்து கலந்துக் கொண்டனர். அஜித்திற்காக நான் பேச முடியாது.  அவருக்கு என்ன காரணம் இருந்தது என்றும் எனக்கு தெரியாது.” என்று கூறியுள்ளார். அத்துடன்  நடிகர் விஜய் குறித்து விஷால்  நல்ல முறையில் பேசியிருப்பது கூடுதல்   சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தான் நடிக்கும் படங்களின் இசை வெளியீட்டு விழா,  புரொமோஷன்ஸ், விருது விழா, திரையுலக பிரச்னைகள், விழாக்கள் என எதிலுமே அஜித் கலந்துக் கொள்ள மாட்டார் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றே.  முன்னாள் முதல்வரும், திமுக தலைவரும்  கருணாநிதிக்கு நடந்த பாராட்டு விழாவில் அஜித்தின் பேச்சு இன்று வரை எவராலும் மறக்க முடியாத ஒன்று.

பொது பிரச்சனைகள், அரசியல் பிரச்சனைகளில் கலைத்துறையினர் தலையிட வேண்டாம் என்று அறிக்கை விடுங்கள் ஐயா என்று அன்றே கலைஞரிடம்  அஜித் கேட்டுக் கொண்டிருந்தார்.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close