இத்தாலியில் நடைபெற்ற 12-வது மிச்செலின் முகெல்லோ கார் பந்தயத்தில் அஜித்குமார் பங்கேற்று 3-வது இடத்தை பிடித்துள்ளதாக அவரது மனைவி ஷாலினி அஜித்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித்குமார் அஜித்குமார், இவர் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அதே நேரத்தில், சர்வதேச அளவில் நடக்கும் கார் பந்தயங்களிலும் பங்கேற்று வருகிறார். அதன்படி, இந்த ஆண்டு தொடக்கத்தில் துபாயில் நடந்த கார் பந்தய போட்டியில் அவரது அணி 3-ம் இடம் பிடித்து ரசிகர்கள் மத்தியில் பாராட்டு பெற்றார்.
நடிகர் அஜித்குமார் கலைத்துறையில் ஆற்றி வரும் சிறந்த பங்களிப்புக்காக அவருக்கு, மத்திய அரசு பத்மபூஷண் விருது அறிவித்தது.
இந்நிலையில், இத்தாலியில் நடைபெற்ற 12வது மிச்செலின் முகெல்லோ கார் பந்தயத்தில் நடிகர் அஜித் குமார் அணிக்கு 3வது இடம் பிடித்துள்ளார் என்று அவருடைய மனைவி ஷாலினி அஜித்குமார் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம், இயக்குநர் மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடித்த விடாமுயற்சி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தில் திரிஷா, அர்ஜுன், ரெஜினா ஆரவ் நடித்திருந்தனர். இதையடுத்து, இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், குட் பேட் அக்லி படத்தில் அஜித் நடித்து வருகிறார்.