/indian-express-tamil/media/media_files/zV90A8xo2mIyRc3i6dl6.jpg)
பிரபல நடிகர் அஜித்குமார் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று (வியாழக்கிழமை) காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. வழக்கமான உடல் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், நாளை வீடு திரும்புவார் என்றும் நேற்று தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும் மருத்துவமனை தரப்பில் இருந்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடப்படவில்லை. இதனால் அவரது ரசிகர்கள் கலக்கமடைந்துள்ளனர். அஜித் தற்போது சிகிச்சை பெற்று வருவதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. நடிகருக்கு நெருக்கமான ஒருவர் கூறுகையில், ஆம், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது உண்மை. மருத்துவமனையின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்திருங்கள். தேவையில்லாத குழப்பம் வேண்டாம் எனக் கூறினார்.
52 வயதான அஜித் குமார், மகிழ் திருமேனி இயக்கத்தில் விடா முயற்சி என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். அர்ஜுன், ஆரவ், சஞ்சய் தத் போன்ற நடிகர்களும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்து வருகிறது.
The schedule of Azerbaijan wrapped up. Team heading to a new location in few days. #VidaaMuyarchi#AKpic.twitter.com/WBOJodm1Gn
— Suresh Chandra (@SureshChandraa) January 29, 2024
இப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடந்த முடிந்த நிலையில், அடுத்து மார்ச் 15 முதல் 2-ம் கட்டப் படப்பிடிப்பு வெளிநாட்டில் நடைபெற உள்ளது எனக் படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது அஜித் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.