தூக்கு துரையை தூக்கி வைத்து கொண்டாடும் ரசிகர்கள்..பின்னாடி ஒரு வரலாறே இருக்கு!

விஸ்வாசம் அஜித் ரசிகர்களுக்கு சரவெடி திருவிழா

விஸ்வாசம் அஜித் ரசிகர்களுக்கு சரவெடி திருவிழா

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
தூக்கு துரை

தூக்கு துரை

தல அஜித் நடிக்கும்  விஸ்வாசம் படத்தில் அவரின் ஒரு கதாப்பாத்திர பெயர் வெளியாகியுள்ளது. தூக்கு துரை என்ற அந்த பெயரை அஜித் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகின்றன. அதே நேரத்தில் படத்தில் அஜித்திற்கு இந்த பெயர் வைக்கப்படத்திற்கான காரணமும் கசிந்துள்ளது.

தூக்கு துரை தூக்குனா...

Advertisment

நடிகர் அஜித் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படம் விஸ்வாசம். சிவா அஜித் கூட்டணியில் நான்காவதாக வெளிவரும் இந்த படம் எப்படி இருக்கு? என்று எதிர்பார்ப்பு கோலிவுர் வட்டாரம் துவங்கி , ரசிகர்களிடமும் அதிகமாக இருந்து வருகிறது.

சமீபத்தில் வெளியான  படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் எதிர்பார்ப்புகளை எகிற வைத்தது.    இந்த படம் குறித்த செய்திகள், அறிவிப்புகள் என அனைத்தும் அவ்வப்போது  வெளியாகி ரசிகர்களை கொண்டாட  வைத்து வருகிறது.

இரண்டு தினங்களுக்கு முன்பு, விஸ்வாசம் படத்தில் அப்பா அஜித் கேரக்டருக்கான புகைப்படங்கள் வெளியாகி சமூகவலைத்தளங்களில் தீயாக பரவின. இந்நிலையில்  இந்த படத்தில் அஜித்தின் ஒரு கதாப்பாத்திரம் பெயர் தூக்கு துரை என்ற தகவல் கசிந்துள்ளது.

Advertisment
Advertisements

சிறுத்தை சிவாவின் திரைப்படங்களில் அஜித் நடிக்க ஆரம்பித்த பிறகு வீரம் திரைப்படத்தில் "விநாயகம்". வேதாளம் திரைப்படத்தில் "கணேஷ்" என பிள்ளையாரின் பெயரையே வைத்திருந்தார். விவேகம் திரைப்படத்தில்  அஜய்குமார் ஏகே என அழைக்கப்பட்டார்.

இப்போது விஸ்வாசம் திரைப்படத்தில் ஒரு அஜித்துக்கு "தூக்கு துரை" என்று பெயர் வைத்துள்ளதாக கூறப்படுகிறது.  இந்த பெயருக்கு பின்னால் சின்ன கதை இருப்பதாக கூறப்படுகிறது.   சண்டை காட்சிகளில்  துரை எதிரிகளை தூக்கி பந்தாடுவதால்  தூக்கு துரை என்று செல்லமாக அழைக்கபடுவார் என்றும் கூறப்படுகிறது.

மொத்தத்தில் விஸ்வாசம் அஜித் ரசிகர்களுக்கு சரவெடி திருவிழா என்பதில் சந்தேகமும் இல்லை.

Puthiya Thalaimurai Viswasam Thala Ajith Maalaimalar

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: