New Update
/tamil-ie/media/media_files/uploads/2022/05/ajith-in-AK61-1200.jpg)
Ajith Kumar gets back to fitness photo viral on internet
சமீபத்தில் ரசிகருடன் அஜித் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அஜித் சில மாதங்களுக்கு முன்பு பார்த்ததை விட மிகவும் ஒல்லியாகவும், பிட்டாகவும் இருக்கிறார்.
Ajith Kumar gets back to fitness photo viral on internet
அஜித் தொடர்ந்து 3வது முறையாக இயக்குனர் எச் வினோத்துடன் இணைந்துள்ளார், தற்காலிகமாக 'ஏகே 61' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படம் ஏப்ரல் மாதம் பூஜையுடன் தொடங்கியது. இந்த படத்திற்காக, அஜித் இப்போது பயங்கர வொர்க் அவுட்டில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் ரசிகருடன் அஜித் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அஜித் சில மாதங்களுக்கு முன்பு பார்த்ததை விட மிகவும் ஒல்லியாகவும், பிட்டாகவும் இருக்கிறார்.
முன்னதாக, அஜித் தனது உடல் எடையை குறைப்பதற்காக, கேரளாவில் உள்ள ஆயுர்வேத மையத்திற்குச் சென்றார். 'ஏகே 61' ஒரு ஹெயிஸ்ட் த்ரில்லர் என்று கூறப்படுகிறது, படப்பிடிப்பிற்காக ஹைதராபாத்தில் ஒரு பெரிய வங்கி செட் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் நடிகர்கள் குறித்த விவரங்களை தயாரிப்பாளர்கள் ரகசியமாக வைத்துள்ளனர். இந்த படம் 2022 இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, AK61 பட அறிவிப்பின் போது, அஜித்தின் ட்ரிப்பி புகைப்படம் அனைவரையும் கவர்ந்தது.
இயக்குனர் எச் வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூருடன் அஜித் இணையும் 3வது படம் இதுவாகும். முன்னதாக, ஹிந்தியில் ஹிட்டான பிங்க் படத்தின் ரீமேக்கான நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களில் மூவரும் இணைந்து பணியாற்றினார்கள்.
வலிமை பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றதாகக் கருதப்பட்டாலும், பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்மறை விமர்சனங்களைப் பெற்றது. அந்த ஏமாற்றத்தை ஏகே61 மூலம் வினோத் ஈடுகட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தை முடித்த பிறகு அஜித் அடுத்ததாக இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து பணியாற்றவுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.