/indian-express-tamil/media/media_files/GZkGOas6Ja1rILWtVmBq.jpg)
நடிகர் அஜித்
கடந்த இரு தினங்களுக்கு முன்பு திடீர் உடல்நலக்குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் அஜித் தற்போது சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக அஜித் கடந்த இரு தினங்களுக்கு முன்பு, திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த தகவல் வெளியாக இணையத்தில் வைரலாக பரவியதை தொடர்ந்து அஜித் ரசிகர்கள் மட்டுமல்லாமல், பலரும் அவருக்கு என்ன ஆச்சு என்று சமூகவலைதளங்களில் கேள்வி எழுப்ப தொடங்கினர்.
இதனிடையே அஜித், நரம்பு வீக்கத்திற்காக மருத்துவ சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், தற்போது அவர் சிகிச்சை முடிந்து, டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து வர்த்தக ஆய்வாளர் ரமேஷ் பாலா தனது எக்ஸ் பக்கத்தில், நடிகர் அஜித் சமீபத்தில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளதாகவும் தற்போது அவர் நலமாக இருப்பதாகவும் கூறிப்பிட்டுள்ளார்.
Actor #Ajithkumar has returned home from his recent hospital visit.. All is well!
— Ramesh Bala (@rameshlaus) March 9, 2024
அதேபோல் சில ரசிகர்கள், அஜித் விளையாட்டு மைதானத்தில் இருக்கும் வீடியோவை தங்களது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து கொண்டனர். அஜித்தின் செய்தித் தொடர்பாளர் சுரேஷ் சந்திரா, ஜூம் நிறுவனத்திடம் முன்பு பேசியிருந்தார். இதில், மூளையில் இருந்து நீர்க்கட்டி அகற்றப்பட்டது என்று வெளியான தகவலுக்கு மறுப்பு தெரிவித்த அவர், மாறாக, நரம்பு வீக்கத்திற்கான மருத்துவ சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார் என்று தெளிவுபடுத்தினார்.
#AjithKumar Sir Recent Pic & Video ❤️#VidaaMuyarchipic.twitter.com/DgXclDDzl4
— Ajith Seenu 2 👑 DARK DEVIL... தல..தாய்..தாரம்.. (@ajith_seenu) March 9, 2024
சுரேஷ் சந்திரா ஜூம் நிறுவனத்திடம் நேற்று முன்தினம் பேசியபோது. அஜித் சார் வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், அங்குள்ள மருத்துவர்கள் அவரது காது மூளையுடன் இணைக்கும் நரம்பில் ஏற்பட்ட தேவையற்ற வீக்கத்திற்கு சிகிச்சை அளிக்க முடிவு செய்தனர். எளிய மருத்துவ முறை மூலம் சிகிச்சை அளித்தனர். அஜித் இப்போது நலமாக இருக்கிறார்.
தற்போது ஐசியூவில் இருந்து வார்டுக்கு திரும்பியுள்ளார்., “அவர் பூரண நலமாக இருப்பதால் அவர் தனது வார்டுக்குத் திரும்பிச் சென்றார். இன்றிரவு அல்லது நாளை அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட வாய்ப்புள்ளது என்பதையும் நான் மீண்டும் சொல்கிறேன்.” என தெரிவித்திருந்தார். அதன்படி தற்போது அஜித் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார்.
அஜித் தற்போது மகிழ் திருமேனியின் ஆக்ஷன் த்ரில்லர் விடா முயற்சியில் படத்தில் நடித்து வருகிறார்.இதில் அர்ஜுன் சர்ஜா, த்ரிஷா, ரெஜினா கசாண்ட்ரா மற்றும் ஆரவ் ஆகியோரும் நடிக்கின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.