Advertisment

குதிரையில் அஜித்; வீரனைப் போன்ற தோற்றம்: அஜித்தின் இந்தப் படம் கைவிடப்பட்டது ஏன்?

சிட்டிசன் படத்தை இயக்கிய சரவண சுபையா அஜித்துடன் மற்றொரு படத்தை இயக்கவிருந்தார்.

author-image
WebDesk
New Update
Actor Ajith mother in law photo goes viral Tamil News
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

அஜித்தின் ரிலீஸ் ஆகாத படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. நடிகர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக  இருந்து வருகிறார். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அஜித் திரைப்படம் மட்டுமின்றி பைக் பயணம் செய்வது, துப்பாக்கி சூடுதல், போட்ரோகிராபி எனப் பலவற்றில் ஈடுபட்டு வருகிறார். 

Advertisment

இவர் தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்திலும், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி ஆகிய இரண்டு திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் அஜித்தின் ரிலீஸ் ஆகாத படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

Idika.jpg

சிட்டிசன் படத்தை இயக்கிய சரவண சுபையா அஜித்துடன் மற்றொரு படத்தை இயக்கவிருந்தார். இதிகாசம் 

என்று அப்படத்திற்கு பெயர் வைக்கப்பட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தயார் செய்யப்பட்ட நிலையில் அப்படம் கைவிடப்பட்டுள்ளது.  அஜித் நடிப்பில் 2001ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சிட்டிசன். இப்படத்தை சரவண சுபையா இயக்கியிருந்தார்.

மாபெரும் வெற்றியடைந்த இப்படத்தை தொடர்ந்து அஜித் நடிக்கவிருந்த திரைப்படம் தான் இதிகாசம். இப்படத்தையும் சரவண சுபையா தான் இயக்கவிருந்துள்ளார். ஹாலிவுட்டில் மிகவும் பிரபலமான இண்டியானா ஜான்ஸ் படம் போல் இப்படத்தின் கதை இருக்கும் என கூறப்படுகிறது. 

இப்படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கூட வெளிவந்துள்ள நிலையில், இப்படம் கைவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் போஸ்டர் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

தொடர்ந்து நடிகர் அஜித் இன்று (ஜுன் 17) திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். இன்று அதிகாலை சுப்ரபாத சேவையில் தரிசனம் செய்தார். வெளியே வந்த அவரைப் பார்த்து ரசிகர் ஒருவர் அவருக்கு அன்பளிப்பாக பெருமாளின் சிலையை கொடுத்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். 

 

GQQeLwhWsAANXQS.jpg

 

Ajithkumar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment