நடிகர் அஜித் குமார் ரசிகர்கள் சிலர் பொது இடங்களில் ‘கடவுளே அஜித்தே’ என்று கோஷம் எழுப்புவது வாடிக்கையாகி வந்த நிலையில், “சமீபமாக முக்கியமான நிகழ்வுகளில் பொதுவெளியில் அநாகரீகமாக் தேவையில்லாமல் எழுப்பப்படும் ‘க... அஜித்தே’ என்ற கோஷம் என்னை கவலையடையச் செய்திருக்கிறது. இந்த செயலை நிறுத்துங்கள்” என்று நடிகர் அஜித் குமார் தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் குமாருக்கு பெரிய எண்ணிக்கையில் ரசிகர்கள் உள்ளனர். அஜித் நடித்த துணிவு படம் குறித்து உள்ளூர் பிரபலங்கள் முதல் சர்வதேச பிரபலங்கள் வரை அப்டேட் கேட்டு வந்தனர். இதை அடுத்து, அஜித் ரசிகர்கள் சிலர், பொது இடங்களில் முக்கியமான நிகழ்வுகளில் ‘கடவுளே அஜித்தே’ என்று கோஷம் எழுப்பி வருகின்றனர்.
அண்மையில், சபரிமலை ஐயப்பன் கோயிலில் அஜித் ரசிகர்கள் சிலர், ‘கடவுளே அஜித்தே’ என்று கோஷம் எழுப்பிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அஜித் ரசிகர்கள் சிலர் இப்படி பொது இடங்களில், முக்கியமான நிகழ்வுகளில் ‘கடவுளே அஜித்தே’ என்று கோஷம் எழுப்புவது பொதுமக்கள் மத்தியில் ஒருவித அசௌகரியத்தை உணர்ந்தனர்.
இந்நிலையில், “சமீபமாக முக்கியமான நிகழ்வுகளில் பொதுவெளியில் அநாகரீகமாக் தேவையில்லாமல் எழுப்பப்படும் ‘க... அஜித்தே’ என்ற கோஷம் என்னை கவலையடையச் செய்திருக்கிறது. இந்த செயலை நிறுத்துங்கள்” என்று நடிகர் அஜித் குமார் தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக நடிகர் அஜித் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சமீபமாக முக்கியமான நிகழ்வுகளில் பொதுவெளீயில் அநாகரீகமாக் தேவையில்லாமல் எழுப்பப்படும் ‘க... அஜித்தே’ என்ற கோஷம் என்னை கவலையடையச் செய்திருக்கிறது. எனது பெயரைத் தவிர்த்து என் பெயருடன் வேறு எந்த முன்னொட்டும் சேர்த்து அழைக்கப்படுவதில் நான் துளியும் உடன்படவில்லை எனது பெயரில் மட்டுமே நான் அழைக்கபட வேண்டும் என விரும்புகிறேன். என்னுடைய இந்த கோரிக்கைக்கு உடனடியாக மதிப்பு கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன். யாயையும் புண்படுத்தாமல் கடினமாக உழைத்து உங்கள் குடும்பத்தை கவனித்துக்கொள்ளுங்கள் மற்றும் சட்டத்தை மதிக்கும் குடிமக்களாக இருங்கள். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் அழகான வாழ்க்கை அமைய வாழ்த்துகள்” என்று நடிகர் அஜித் குமார் ரசிகர்களூக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“