Advertisment

அஜித் - ஷாலினி 24-ம் ஆண்டு திருமண நாள் கொண்டாட்டம்; வைரல் போட்டோ

அஜித் குமார் - ஷாலினி தம்பதியரின் 24-ம் ஆண்டு திருமண நாளில், அவர்களுக்கு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து ட்ரெண்டிங் செய்து கொண்டாடினர்.

author-image
WebDesk
New Update
Ajith Shalini 1

அஜித் குமார் - ஷாலினி தம்பதியரின் 24-ம் ஆண்டு திருமண நாள் கொண்டாட்டம்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் அஜித் குமார் - ஷாலினி தம்பதியரின் 24-ம் ஆண்டு திருமண நாளில், அவர்களுக்கு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து ட்ரெண்டிங் செய்து கொண்டாடினர். இதனிடையே, அஜித் - ஷாலினி திருமண நாள் கொண்டாட்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertisment

தமிழ் சினிமா உலகில் நடிகர் அஜித் குமார் - ஷாலினி ஜோடி தங்கள் திருமண வாழ்க்கையில் வெற்றிகரமான தம்பதியராக திகழ்கின்றனர். அஜித்தும், ஷாலினியும் கடந்த 2000-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள். அஜித் - ஷாலினிக்கு அனௌஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் இருக்கிறார்கள். ஷாலினி திருமணத்துக்குப் பிறகு, சினிமாவில் இருந்து ஒதுங்கிக்கொண்டார். அஜித் இப்போது இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்துவருகிறார். அடுத்து, குட் பேட் அக்லி படத்தில் நடிக்க உள்ளார். 

Ajith Shalini

இந்நிலையில், அஜித்தும் ஷாலினியும் இன்று (24.04.2024) தங்களது 24ஆவது திருமண நாளை கொண்டாடுகிறார்கள். சரண் இயக்கத்தில் அமர்க்களம் படத்தில் அஜித்தும், ஷாலினியும் இணைந்து நடித்தனர். அந்தப் படத்தில் நடித்தபோது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்து இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர். தமிழ் சினிமா உலகின் வெற்றிகரமான ஜோடியாக அஜித்தும், ஷாலினியும் தங்களுடைய 24-வது ஆண்டு திருமண நாளைக் கொண்டாடி வருகிறார்கள்.

அஜித் - ஷாலின் தம்பதியருக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து மழைப் பொழிந்து வருகிறார்கள். ரசிகர்கள், அஜித்குமார்ஷாலினி திருமணநாள் வாழ்த்துகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு ட்ரெண்டிங் செய்து அஜித் - ஷாலினி திருமண நாளைக் கொண்டாடினர். அதெ நேரத்தில், அஜித் - ஷாலினி இருவரும் தங்கள் திருமண நாளைக் கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Ajith Shalini Ajith
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment