பைக்கில் இருந்து விழுந்தாலும் திரும்ப எழுந்து சாகசம் செய்த அஜித்; வலிமை மேக்கிங் வீடியோ
இந்த காட்சியின்போது, நாம் தடுமாறி விழலாம் ஆனால், திரும்ப எழ வேண்டும். நாம் போரில் இருந்து வெளியே ஓடாமல் இருந்தால் போதும் என்று மகாத்மா காந்தியின் வாசகம் குறிப்பிடப்படுகிறது.
வலிமை திரைப்படம் வெளியாகும் நாளை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், வலிமை படப்பிடிப்பில் பைக்கில் இருந்து விழுந்த அஜித் திரும்ப எழுந்து மீண்டும் அதே பைக் சாகசம் டேக்கில் நடிக்கும் வலிமை படத்தின் மேக்கிங் வீடியொ வெளியாகி வைரலாகி வருகிறது.
Advertisment
இயக்குனர் ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள வலிமை படம் அளவுக்கு வேறு எந்த படத்துக்காவது சர்வதேச அளவில் ரசிகர்களால் அப்டேட் கேட்கப்பட்டிருக்குமா என்பது சந்தேகம்தான்.
ஹெச். வினொத் இயக்கத்தில் அஜித் குமார் நடித்துள்ள வலிமை திரைப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். இந்த படத்துக்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். வலிமை திரைப்படம் எப்போது வெளியாகும் என்று எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு வலிமை படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில், வலிமை படத்தின் மோஷன் போஸ்டரும் சிங்கிள் டிராக்கும் வெளியிடப்பட்டது. இந்த நிலையில்தான், வலிமை அப்டேட் கேட்ட அஜித் ரசிகர்களுக்கு வலிமை படத்தின் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட வலிமை படத்தின் மேக்கிங் வீடியோவை தயாரிப்பாளர் போனி கபூர் வெளியிட்டுள்ளார்.
போனி கபூர் வெளியிட்டுள்ள வலிமை படத்தின் மேக்கிங் வீடியோவில், படப்பிடிப்பின்போது அஜித் பைக் சாகசம் செய்யும் காட்சி படமாக்கப்படும்போது யாரும் எதிர்பாராத விதமாக அஜித் பைக்கில் இருந்து கிழே விழுகிறார். இதைப் பார்த்து எல்லோரும் பதறிப் போகிறார்கள். ஆனால், அஜித் பைக்கில் இருந்து விழுந்தாலும் திரும்ப எழுந்து அதே காட்சியில் அடுத்த டேக்கில் சிறப்பாக பைக் சாகசம் செய்கிறார். இந்த காட்சியின்போது, நாம் தடுமாறி விழலாம் ஆனால், திரும்ப எழ வேண்டும். நாம் போரில் இருந்து வெளியே ஓடாமல் இருந்தால் போதும் என்று மகாத்மா காந்தியின் வாசகம் குறிப்பிடப்படுகிறது.
விழுந்தாலும் திரும்ப எழுந்து சாகசம் செய்யும் அஜித்தின் இந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வைரலாக்கி கொண்டாடி வருகின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”