ஊரடங்கு உத்தரவு காலத்தில் தான் பொருளாதார ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பலர் உதவி செய்யும் நிலையில், தனக்கு உதவ வேண்டும் என்ற கோரிக்கையை நடிகர் அஜித் ஏற்று உதவ முன்வருவாரா என்று தீப்பெட்டி கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
ரேணிகுண்டா, பில்லா 2, கண்ணே கலைமானே உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் தீப்பெட்டி கணேசன். கொரோனா ஊரடங்கால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள தீப்பெட்டி கணேசனுக்கு நடிகர் விஷால் தரப்பினர் அரிசி மளிகை பொருட்களை வழங்கி உதவி செய்துள்ளனர். அதற்கு நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டிருந்த அவர் தனியார் யூடியூப் சேனலுக்கும் பேட்டியளித்திருந்தார்.
அஜித் உதவி செய்தாரா? - கண்ணீர் பதில்
அப்போது உங்களின் நிலை குறித்து அஜித்திடம் உதவி கேட்டீர்களா என்று அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த தீப்பெட்டி கணேசன், “படப்பிடிப்பு தளத்தில் என்னுடைய நிஜபெயரை (கார்த்திக்) சொல்லி கூப்பிடும் ஒரே கடவுள் அஜித். அவரிடம் உதவி கேட்க அவருடன் தொடர்பிலிருக்கும் பல பேர் மூலம் ஒருமுறையாவது பார்த்துவிட முடியுமா என முயற்சித்தேன்.
எனக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை. எனது குழந்தைகளுக்கு ஏதேனும் நல்லது நடக்க வேண்டும். இது அஜித்தின் காதுக்குப் போகும் என நினைக்கிறேன். அவருக்கு விஷயம் தெரிந்தால் உடனே அழைத்துவிடுவார். நிறைய பேர் அதைக் கொண்டு போய் சேர்ப்பதில்லை. அதுதான் பிரச்னை. தயவு செய்து இதை அவரிடம் கொண்டு போய் சேருங்கள் என்று கன்ணீர் மல்க கூறினார் தீப்பெட்டி கணேசன்.
சினேகன் நேரில் உதவி
பாடலாசிரியர் மற்றும் பிக் பாஸ் பிரபலமான சினேகன் அவரின் வீட்டிற்கே சென்று நேரில் சந்தித்து, 2 வாரங்களுக்கு அவர்களுக்கு தேவைப்படும் உணவு பொருள்களை அளித்துள்ளார். மேலும் தீப்பெட்டி கணேசனின் குழந்தைகளின் இந்த வருடத்திற்கான படிப்பு செலவை சினேகன், செயலகம் அறக்கட்டளை சார்பாக ஏற்றுக்கொண்டுள்ளார். இதுபோன்று கஷ்டப்படும் கலைஞர்களுக்கு உதவ பலரும் முன் வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கலைஞர்ளைக் காப்பதும் நமது பொறுப்பு pic.twitter.com/HnuQb02Lcm
— Snehan (@SnehanMNM) April 22, 2020
ராகவேந்திரா லாரன்ஸ் உதவிக்கரம்
தீ்ப்பெட்டி கணேசனின் வீடியோவை, ராகவேந்திரா லாரன்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
Hai brother just now my friend shared this video, I will share this video with Ajith sir manager. If it reaches to Ajith sir he will definitely help. He is very kind hearted person. I will also do my part to help your children for education. Please share your contact details. https://t.co/vmQ9qadHQr
— Raghava Lawrence (@offl_Lawrence) April 21, 2020
ஹாய் பிரதர். இந்த வீடியோவை இப்போது தான் என் நண்பர் பகிர்ந்தார். இந்த வீடியோவை நான் அஜித்தின் மேலாளருக்கு பகிர்கிறேன். இச்செய்தி அஜித்துக்கு சென்றால் நிச்சயமாக அவர் உதவி செய்வார். அவர் மிகவும் நல்ல மனம் கொண்ட நபர். உங்கள் குழந்தைகளின் கல்விக்கு நானும் என்னாலான உதவியைச் செய்கிறேன். உங்கள் தொடர்பு எண்ணை தெரியப்படுத்துங்கள்” என்று லாரன்ஸ் கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.