நடிகர் அஜித் குமார், இயக்குநர் வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோர் 3-வது முறையாக இணைந்துள்ள படம் 'துணிவு'. பஞ்சாபில் நடைபெற்ற வங்கி்க் கொள்ளையை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது.
Advertisment
மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜிப்ரான் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். வரும் ஜனவரி 11 ஆம் தேதி துணிவு படம் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.
&feature=emb_imp_woyt
Advertisment
Advertisements
இந்த படத்தில் சமூக ஊடக பிரபலம் ஜி.பி. முத்துவும் நடித்திருக்கிறார். தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியைச் சேர்ந்த ஜி.பி.முத்து டிக் டாக் மூலம் பிரபலமானார். கொரோனா லாக் டவுனில் அவரது யூடியூப் வீடியோக்கள், ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. அவர் வசைபாடுவதே கேட்கவே ஏராளமான ரசிகர்கள் அவரது வீடியோவை பார்க்க ஆரம்பித்தனர். அவருக்கு கட்டுக்கட்டாக கடிதங்களை எழுதி அனுப்பினர்.
அதன் அடுத்த கட்டமாக ஜிபி முத்து விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அவருக்கு ரசிகர்கள் தங்கள் அமோக ஆதரவை தெரிவித்தனர். ஆனால் முத்து பாதியிலேயே நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.
சன்னி லியோன் நடித்து சமீபத்தில் வெளியான ஓ மை கோஸ்ட் படத்திலும் ஜி.பி. முத்து நடித்திருந்தார்.
இந்நிலையில் கரூரில் செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த ஜி.பி. முத்து துணிவு படத்தில் நடித்த அனுபவம் குறித்து பகிர்ந்து கொண்டார்.
துணிவு படத்தில் சில காட்சிகளில் நடித்திருக்கிறேன், ஆனால் அஜித்துடன் சேர்ந்து நடிக்கவில்லை, அஜித், விஜய், சூப்பர் ஸ்டார் உடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் அது எனக்கு மிகப்பெரிய விஷயம், என்று கூறினார்.
மேலும் செய்தியாளர் துணிவு, வாரிசு இரண்டில் முதலில் எந்த படம் பார்ப்பீங்க என்று கேட்டதற்கு, எந்த பட த்துக்கு டிக்கெட் கிடைக்கிறதோ, அதை முதலில் பார்ப்பேன். அஜித், விஜய் இரண்டு பேருமே நல்லவர்கள். இருவரின் ரசிகர்களும் இந்த படங்களை கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று அவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“