வினோத் இயக்கத்தில் அஜித்தின் ‘வலிமை’ படம் பிப்ரவரி 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, ஜிப்ரான் பின்னணி இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் ஹுமா குரேஷி மற்றும் கார்த்திகேயா கும்மகொண்டா உள்ளிட்ட பல நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர். நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட வலிமை’ படம், முதலில் பொங்கலுக்கு வெளியிட திட்டமிடப்பட்டது, ஆனால் தொற்றுநோய் கட்டுப்பாடுகளால் தாமதமானது.
இந்நிலையில் தற்போது திரையரங்குகளில் வெளியான நிலையில், ‘வலிமை’ முதல் நாளிலேயே வசூலில் சாதனை படைக்கத் தொடங்கியுள்ளது.
ஆரம்பகால ட்ரெண்ட்களின்படி, இப்படம் முதல் நாளில்’ தமிழ்நாட்டில் ரூ. 36.17 கோடியை வசூலித்துள்ளது. உலகளவில் வசூலைப் பொருத்தவரை, ரூ. 45-50 கோடி வரை மிகப்பெரிய மொத்த வசூலைக் குவித்துள்ளது.
வலிமை, சென்னையில் மட்டும் முதல் நாளில் ரூ 1.82 கோடியை வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
BoxOfficeIndia இன் அறிக்கையின்படி, “தமிழகத்தில் முதல் நாளிலேயே 25 கோடி வசூலைத் தாண்டிய முதல் படமாக வலிமை இருக்கும், இது இண்டஸ்ட்ரிக்கு கிடைத்த நல்ல வரவேற்பு என்று கூறியுள்ளது.
வர்த்தக ஆய்வாளர் ரமேஷ் பாலா, பாக்ஸ் ஆபிஸ் இந்தியா அறிக்கையை மேற்கோள் காட்டி, படம் ஒரு அற்புதமான தொடக்கத்தைப் பெற்றது என்பதை உறுதிப்படுத்தினார்.
மேலும், வலிமைக்கு மலேசியா மற்றும் சிங்கப்பூரில் நல்ல ஒப்பனிங் கிடைத்துள்ளது. ரமேஷ் பாலாவின் கூற்றுப்படி, இந்த படம் இரு நாடுகளிலும் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது.
படத்தின் வெளியீட்டிற்கு முந்தைய வணிகத்தைப் பற்றி பேசுகையில், வலிமையின் தமிழ்நாடு திரையரங்கு உரிமை 64.50 கோடியும், இந்தியாவில் ஒட்டுமொத்தமாக ரூ.76 கோடியும் மற்றும் உலகம் முழுவதிலும் 20 கோடிக்கும் விற்கப்பட்டது.
கொரோனா கட்டுப்பாடுகள் இல்லாத நிலையில், திரையரங்குகளில் 100% ஆக்கிரமிப்பு உள்ளதால்’ திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே வெற்றி பெற பெரிதும் உதவியுள்ளது. ஆனால் படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதா என்பது வெளியான முதல் வார இறுதியில் தான் தெரியும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“