/indian-express-tamil/media/media_files/yw9IiuKB02xQrVpBYxht.jpg)
Vidaamuyarchi Movie Team
அஜித் நடிக்கும் ‘விடாமுயற்சி’ படத்தின் அஜர்பைஜான் ஷெட்யூல் நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
தடையறத் தாக்க, மீகாமன், தடம், கலகத் தலைவன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ்திருமேனி இப்போது அஜித் நடிப்பில் விடாமுயற்சி படத்தை இயக்கி வருகிறார்.
லைகா தயாரிக்கும் இந்த படத்துக்கு அனிருத் இசை அமைக்கிறார். த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உட்பட பலர் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு கடந்த ஆண்டு அஜர்பைஜானில் தொடங்கியது.
இதனிடையே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘குட் பேட் அக்லி’ படத்தில் அஜித் இணைந்தார். இதன் படப்பிடிப்பு ஹைதராபாத் நகரில் நடைபெற்றது. இந்த சூழலில் கடந்த மாதம் அஜர்பைஜானில் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு பணிகள் மீண்டும் தொடங்கியது.
சுமார் 30 நாட்களுக்கு மேல் அங்கு படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில் அஜர்பைஜான் ஷெட்யூல் நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சமூக வலைதளத்தில் புகைப்படம் மற்றும் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளது. அதில் அஜித் உட்பட படக்குழுவினர் இடம்பெற்றுள்ளனர்.
SUCCESSFUL COMPLETION OF "VIDAAMUYARCHI" schedule in the endless terrains of AZERBAIJAN, BAKU! 🤗#VidaaMuyarchi#EffortsNeverFail#AjithKumar#MagizhThirumeni@LycaProductions#Subaskaran@gkmtamilkumaran@trishtrashers@akarjunofficial@anirudhofficial@Aravoffl… pic.twitter.com/nrg1peZiZN
— Lyca Productions (@LycaProductions) July 21, 2024
விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. தொடர்ந்து படத்தின் மூன்றாவது போஸ்டரை இரண்டு தினங்களுக்கு முன் படக்குழு வெளியிட்டது.
What a wait to see you like this sir❤️❤️ #VidaaMuyrachipic.twitter.com/dnvnpKXMAM
— Aarav Kizar (@Aravoffl) July 19, 2024
இதனால் படக்குழு விரைவில் டீசர், ட்ரைலர் மற்றும் ரிலீஸ் குறித்த அறிவிப்பை வெளியிடுவார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.