தமிழ் சினிமா உலகின் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் குமார் துணிவு படத்தை தொடர்ந்து, இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' படத்தில் நடித்துள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தில் நடிகர் அஜித் உடன், திரிஷா, அர்ஜுன், ரெஜினா, சந்தீப் கிஷன், ஆரவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் 'விடாமுயற்சி' வெளியாக உள்ளது.
இந்நிலையில், நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும் 'விடாமுயற்சி' படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் கடந்த வாரம் நிறைவடைந்தது. அஜித், திரிஷா, மற்றும் படக்குழுவினரின் புகைப்படங்கள் வெளியாகி வைரலானது. முன்னதாக, கடந்த நவம்பர் 28-ம் தேதி விடாமுயற்சி திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.
அஜித்தின் ஆக்ஷன் திரில்லர் படமான விடாமுயற்சி திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையையொட்டி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
அஜித் ரசிகர்கள் விடாமுயற்சி படத்தின் அப்டேட் கேட்டு வந்த நிலையில், நவம்பரில் டீசர், டிசம்பரில் படப்பிடிப்பு நிறைவு என்று அடுத்தடுத்து அப்டேட் வெளியிட்ட படக்குழுவினர், விடாமுயற்சி படத்தின், டீசர், பர்ஸ்ட் சிங்கிள் டிசம்பர் 27-ம் தேதி மதியம் 1 மணிக்கு வெளியாகும் என அறிவித்துள்ளனர். இதனால், அஜிடத ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“