Advertisment

திருப்பதியில் நடிகர் அஜித் சாமி தரிசனம்; ஸ்பெஷல் கிஃப்ட் கொடுத்த ரசிகர்!

திருப்பதி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த நடிகர் அஜித்; தங்கியிருந்த ஹோட்டல் ஊழியர்களுடன் உரையாடும் வைரல் வீடியோ!

author-image
WebDesk
New Update
ajith tirupati

திருப்பதி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த நடிகர் அஜித்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

நடிகர் அஜித்குமார் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Advertisment

நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘விடாமுயற்சி’. மகிழ் திருமேனி இந்தப் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி திரைப்படத்தில் அஜித் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் தெலுங்கு நடிகை ஸ்ரீலீலா நடிக்கிறார். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார்.

முன்னதாக விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் தொடங்கியது. இந்த படப்பிடிப்பின் போது அஜித்தும், ஆரவ்வும் விபத்தில் சிக்கி உயிர்பிழைத்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து இந்தப் படம் குறித்த எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை.

இந்தநிலையில், இம்மாத இறுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் எனவும், இன்னும் 20-30% படப்பிடிப்பே மீதமுள்ளது எனவும் நடிகர் அர்ஜூன் நேற்று தெரிவித்தார். விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படங்களின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், வரும் தீபாவளி மற்றும் பொங்கலுக்கு இத்திரைப்படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அஜித் ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் விடாமுயற்சி படப்பிடிப்புக்காக அஜர்பைஜான் செல்வதற்கு முன் நடிகர் அஜித்குமார் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

இன்று அதிகாலை திருப்பதி வெங்கடேஸ்வரா கோயிலுக்கு வந்த நடிகர் அஜித், வி.ஐ.பி தரிசன நேரத்தின்போது சாமி தரிசனம் செய்துள்ளார். அஜித் பட்டு வேட்டி சட்டை அணிந்து சாமி தரிசனம் செய்திருக்கிறார். பின்னர் அங்கிருந்த ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அப்போது ரசிகர் ஒருவர், அவருக்கு பெருமாள் சிலையை பரிசளித்திருக்கிறார். இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

மேலும், அஜித் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து, தான் தங்கியிருந்த ஹோட்டலில் பணிபுரியும் ஊழியர்களிடம் பேசிவிட்டு சென்ற வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Ajithkumar Tirupati
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment