/tamil-ie/media/media_files/uploads/2019/07/z12.jpg)
Nerkonda Paarvai Release Date : அஜித்தின் 'நேர்கொண்ட பார்வை' ரிலீஸ் தேதி அறிவிப்பு!
Ajith Kumar's Nerkonda Paarvai Release Date: ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார், வித்யாபாலன், ரங்கராஜ் பாண்டே, அபிராமி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் 'நேர்கொண்ட பார்வை' படம் ஆகஸ்ட்.8ம் தேதி வெளியாகும் என தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்துள்ளார்.
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார், வித்யாபாலன், ரங்கராஜ் பாண்டே, அபிராமி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் 'நேர்கொண்ட பார்வை'. விஸ்வாசம் படத்தின் வெற்றிக்குப் பிறகு அஜித் இப்படத்தில் நடத்திருக்கிறார்.
முதலில், ஒரு பக்கா ஆக்ஷன் கதையை அஜித்திடம் இயக்குனர் வினோத் சொல்லி இருக்கிறார். ஆனால், அஜித் அந்த கதையில் பின்னர் நடிப்பதாகவும், முதலில் ஹிந்தி படமான 'பிங்க்' ரீமேக் செய்யலாம். அதை நீங்கள் தான் இயக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.
நீண்ட ஆலோசனைக்குப் பிறகு வினோத் ஒப்புக்கொண்ட பிறகு தான் இப்படத்தின் ஷூட்டிங்கே தொடங்கியது. இதுதான் தனது அடுத்தப் படம் என்பதில் தெளிவாக இருந்த அஜித், வினோத் தான் இப்படத்தை இயக்க வேண்டும் என்பதிலேயும் தெளிவாகவே இருந்திருக்கிறார்.
இந்நிலையில், 'நேர்கொண்ட பார்வை' திரைப்படம் ஆகஸ்ட்.8ம் தேதி வெளியாகும் என தயாரிப்பாளர் போனி கபூர் இன்று அறிவித்துள்ளார்.
#NerKondaPaarvai will release Worldwide on August 8th. #NerKondaPaarvaiFromAug8#AjithKumar@ZeeStudiosInt#HVinoth#BayViewProjects@SureshChandraa@ShraddhaSrinath@thisisysr@nirav_dop@dhilipaction@RangarajPandeyR@ProRekha@DoneChannel1pic.twitter.com/OXEUUJmsA3
— Boney Kapoor (@BoneyKapoor) 15 July 2019
சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலர் ரசிகர்கள் இடையே, குறிப்பாக பெண்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
நேர்கொண்ட பார்வை ரிலீஸ் தேதி அறிவித்த சில நிமிடங்களிலேயே, இந்திய அளவிலான டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்தது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.