/indian-express-tamil/media/media_files/32dP2yWmYmG08frcw8pT.png)
அஜித் குமாரின் புதிய படமான விடாமுயற்சி கலை இயக்குனர் மிலன் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
art director Milan died due to heart attack: அஜித் குமார் மகிழ்திருமேனி இயக்கத்தில் விடா முயற்சி என்ற புதிய படத்தில் நடித்தவருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடைபெறுகிறது.
இந்தப் படத்தில் கலை இயக்குனராக மிலன் பணியாற்றிவந்தார். இவர் இன்று மாரடைப்பு காரணமாக உயிர் இழந்தார். இதில் திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நேற்று இரவு படப்பிடிப்பு நடந்தது. அப்போது மிலன் சாதாரணமாக இருந்துள்ளார். இன்று காலை, அவர் தனது குழுவில் உள்ள அனைவரையும் வேலைக்கு கூட்டிச் சென்றுள்ளார். இந்த நிலையில் அவருக்கு காலை வியர்த்துக் கொட்டியுள்ளது. தொடர்ந்து அவர் மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்ததும், அஜித்தும் படத்தின் இயக்குனர் மகிழ் திருமேனி மற்றும் ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா ஆகியோர் மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர். இந்த நிலையில் மிலன் உயிரிழந்துவிட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிலனின் உடலை சென்னையில் கொண்டு வர, அவரது குடும்பத்தினரும் நண்பர்களும் அஜர்பைஜானில் உள்ள இந்திய தூதரகத்துடன் தொடர்பில் உள்ளனர்.
மிலனின் மனைவி தற்போது சென்னையில் வசித்து வருகிறார். அஜர்பைஜான் படப்பிடிப்பின் போது அவருக்கு உதவியாக மகனும் சென்றுள்ளார். மிலனின் இறுதி அஞ்சலி சென்னையில் நடைபெற உள்ளது.
மிலன், நடிகர் சூர்யா படத்திலும் கலை இயக்குனராக பணியாற்றிவந்தார். இவர் அஜித் குமாரின் பில்லா, வீரம், வேதாளம், துணிவு உள்ளிட்ட படங்களிலும், விஜய்யின் வேலாயுதம், வேட்டைக்காரன் உள்ளிட்ட படங்களிலும் கலை இயக்குனராக பணியாற்றி உள்ளார்.
மாரடைப்பால் உயிரிழந்த மிலனுக்கு வயது 54 ஆகும். அஜித் குமாரின் விடா முயற்சி திரைப்படம் சமீபத்தில்தான் அஜர்பைஜானில் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.