/indian-express-tamil/media/media_files/BtIPPJvohDUZQFvLV9q7.jpg)
நடிகை சுரேகா வாணி
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜித், விஜய் உள்ளிட்டோர் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை சுரேகா வாணி, திடீரென மொட்டை போட்டுக்கொண்ட வீடியோவை வெளியிட்டுள்ளதால் அவருடைய ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தெலுங்கு சினிமா மூலம் அறிமுகமானவர் நடிகை சுரேகா வாணி. அம்மா கதாபாத்திரங்களில் நடித்து முத்திரை பதித்து வருகிறார். அவருக்கென தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறார்கள்.
தெலுங்கு சினிமாவில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான சுரேகா வாணி தமிழ் சினிமாவிலும் அம்மா கதாபாத்திரத்தில் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ளார்.
நடிகர் தனுஷின் உத்தமபுத்திரன் படத்திலும், நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான தெய்வத்திருமகள் படத்திலும் நடித்து கவனம் பெற்றவர். தனுஷ் படத்தில் வில்லனின் மனைவியாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். விக்ரம் படத்தில் நடிகர் எம்எஸ் பாஸ்கர் மனைவியாக நடித்து கவனத்தை ஈர்த்தார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜித், விஜய் உள்ளிட்டோர் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
தெலுங்கு, தமிழ் சினிமாக்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வரும் சுரேகா வாணி, தெலுங்கு திரைப்பட இயக்குநர் சுரேஷ் தேஜாவை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில், கடந்த 2019-ம் ஆண்டு சுரேகா வாணியின் கணவர் சுரேஷ் தேஜா உடல்நலக்குறைவால் காலமானார். இதைத் தொடர்ந்து, தனது மகளுடன் தனியாக வசித்து வரும் சுரேகா வாணியின் இரண்டாவது திருமணம் பற்றி கிசுகிசுக்களும் உலா வருகின்றன.
சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும், நிறைய புகைப்படங்களையும் தனது மகளுடன் சேர்ந்து ரீல்ஸ்களையும் பதிவிட்டு வருகிறார்.
அவருடைய சமீபத்திய வீடியோ பதிவு ஒன்றில் சுரேகா வாணி மொட்டை அடித்துக்கொண்டிருப்பது சிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
சுரேகா வாணி மொட்டை தலையுடன் இருக்கும் வீடியோப் பார்த்த ரசிகர்கள், உங்களுக்கு என்ன ஆச்சு என்று கம்மெண்ட்டில் கேள்வி எழுப்பினர். இதற்கு சுரேகா வாணி தனது மகளுடன் திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு ஏழுமலையானுக்கு மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்தியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.