அகோரியாக அஜித்: சமூக வலைதளங்களில் வலம் வரும் புகைப்படம்

Director Bala’s Naan Kadavul: ஒல்லியாக இருந்ததால் எனக்கு நானே போட்டுக்கொண்ட வேஷம் தான் என்னுடைய மூர்க்கத்தனம்.

ajith, diwali

Thala Ajith: பல தோல்விகளுக்குப் பிறகு துவண்டு விடாமல், இன்று முன்னணி நடிகராக திகழ்ந்துக் கொண்டிருக்கிறார் நடிகர் அஜித். தற்போது ’வலிமை’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை ‘நேர்க்கொண்ட பார்வை’ படத்தை இயக்கிய ஹெச்.வினோத் இயக்கி வருகிறார்.

naan kadavul ajith, aghori ajith

ஆரம்ப காலத்தில் அஜித் தவற விட்ட படங்கள் ஏராளம். அந்தப் படங்களில் வேறு நடிகர் நடித்து, சூப்பர் டூப்பர் ஹிட்டும் ஆகியுள்ளன. உதாரணமாக இயக்குநர் பாலா இயக்கத்தில் ’நந்தா’, ‘நான் கடவுள்’ ஆகிய படங்களில் முதலில் அஜித் நடிப்பதாக இருந்தது. ஆனால், பல்வேறு காரணங்களால் அது நடக்கவில்லை. தற்போது வரை அஜீத்தும் பாலாவும் இணையவில்லை.  நான் கடவுள் படத்தில் நடிப்பதற்காக நடிகர் அஜித் கஷ்டப்பட்டு உடலை குறைத்து நீளமான முடியையும் வளர்த்திருந்தார்.

அஜீத்துடன் ஏன் படம் பண்ணவில்லை எதனால் நான் கடவுள் படம் கைவிடப்பட்டது என்று சில வருடங்களுக்கு முன்னர் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருந்தார் பாலா.  அதில், “எனக்கும் அஜித்துக்கும் தொழில் ரீதியாக சில முரண்பாடுகள் இருந்தன. சில கருத்து வேறுபாடுகளும் இருந்தது, அதை எங்களுக்குள் பேசி தீர்த்துக் கொண்டோம். உணர்வுப்பூர்வமான அந்த செய்தியை பிரபல பத்திரிக்கை ஒன்றில் சொன்ன விதமும் அதனால் ஏற்பட்ட பிரச்னையும் என்னை அதிர்ச்சியடைய வைத்தது. ஒல்லியாக இருந்ததால் எனக்கு நானே போட்டுக்கொண்ட வேஷம் தான் என்னுடைய மூர்க்கத்தனம். ஆனால் அந்த பிரபல பத்திரிகையில் வந்த செய்தி என்னை ரவுடி போல சித்தரித்திருந்தது” என்றார்.

இந்நிலையில் ’நான் கடவுள்’ படத்துக்காக அஜித் நடிக்கவிருந்தபோது, வெளியான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியிருக்கிறது. அதில், சடை முடி, நெற்றியில் குங்குமம் என அகோரியாக காட்சியளிக்கிறார் அஜித்.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Ajith naan kadavul aghori image

Next Story
எந்த சின்னத்திரை காமெடியனுக்கு கிடைக்காத புகழ்.. ஒரே வீடியோவால் வெற லெவலுக்கு போன விஜய் டிவி ராமரின் மறுபக்கம்vijat tv ramar
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com