/tamil-ie/media/media_files/uploads/2022/02/beast.jpg)
Ajith photo in Vijay’s Beast movie song promo video: பீஸ்ட் பட முதல் பாடல் வெளியீட்டுக்கான ப்ரோமோவில் அஜித் புகைப்படம் இடம்பெற்றிருந்தது இணையத்தில் பேசு பொருளாகி உள்ளது.
இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய்யின் 65 வது படமாக உருவாகி உள்ள படம் பீஸ்ட். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகிபாபு, அபர்னா தாஸ், விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகி உள்ள பீஸ்ட் படத்தின் ஃபஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
இந்தநிலையில் பீஸ்ட் படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு வெளியானது.
இதற்காக, இயக்குனர் நெல்சன் தில்ப்குமார் ஒரு வேடிக்கையான ப்ரோமோவை வெளியிட்டார். இந்த நிகழ்வு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தரின் ஸ்டுடியோவில் எடுக்கப்பட்டது. இந்த நிகழ்வில் சிவகார்த்திகேயனும் கலந்துக் கொண்டார்.
இதில் சிவகார்த்திகேயன் அரேபிய இசை மற்றும் தமிழ் நாட்டுப்புற இசைகளின் கலவையான “அரபிக் குத்து” என்ற பாடலுக்கான வரிகளையும் எழுதியுள்ளார். வீடியோவில் அனிருத், “உலகம் முழுவதும் செல்வோம் என்று கூறியுள்ளார். மேலும் பாடல் குறித்து விஜய்க்கு போன் செய்து சொல்கிறார் அனிருத். பாடல் பெயரை விஜய் கேட்க, அரபிக்குத்து என்கிறார் அனிருத். பாடல் பெயரை கேட்டதும் நெல்சன், அனிருத் மற்றும் சிவகார்த்திக்கேயனை கலாய்க்கிறார் விஜய். "அரபிக் குத்து" பிப்ரவரி 14 அன்று காதலர் தின கொண்டாட்டத்துடன் இணைந்து வெளியாகிறது.
இந்தநிலையில், இணையத்தில் வைரலான இந்த வீடியோவில் அஜித்தின் விவேகம் படத்திற்காக அனிருத் வாங்கிய விருது ஒன்று இருந்தது. அதில் அஜித் ஸ்டில் புகைப்படம் இருப்பதை பார்த்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.