New Update
/indian-express-tamil/media/media_files/nMFENgH0yu6IwB6f7aXl.jpg)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித்குமார். அஜித் நடிப்பது மட்டுமின்றி பைக், கார் மீதும் ஆர்வம் கொண்டவர். அடிக்கடி வெளியூர், வெளிநாடுகளுக்கு பைக்கில் பயணம் செய்வார்.
அஜித் தற்போது தமிழில் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், அஜித்- ஷாலினி தம்பதி இப்போது வெளிநாட்டில் இருப்பதாக தெரிகிறது. அந்த வகையில் ஷாலினி தனது காதல் கணவர் அஜித்குமாருடன் எடுத்த செல்ஃபி வீடியோவை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர்கள் இருவரும் வெளிநாட்டில் ஒன்றாக சேர்ந்து இடங்களை பார்த்து வருகின்றனர்.
May the love and happiness you feel today shine through the years.”
— Mr BLACK (@Mu_Ra_Kar) October 7, 2024
New Look THALA 🔥
Lovely Moments 🫰🏻😍🫰🏻#Ajithkumar𓃵 #ShaliniAjithkumar pic.twitter.com/dKExKNXegL
அஜித் கருப்பு நிற கோட், கூலிங் கிளாஸ் அணிந்துள்ளார். முன்னதாக ஷாலினி தனது மகன் ஆத்விக்குடன் ஸ்பெயின் நாட்டில் இருக்கும் உலகப் புகழ்பெற்ற கால்பந்து மைதானத்தில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து இருந்தார். அதனால் அவர்கள் இப்போது ஸ்பெயின் நாட்டில் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.