Ajith Shalini Wedding Anniversary: இணையத்தை தெறிக்க விடும் அஜித் ரசிகர்கள்!

Ajith Shalini Wedding Anniversary: அஜித்தைப் பற்றிய சாதாரண விஷயங்களைக் கூட டிரெண்ட் செய்யும் அவரது ரசிகர்களுக்கு இன்று சொல்லவா வேண்டும். 

Ajith Shalini Wedding Anniversary: அஜித்தைப் பற்றிய சாதாரண விஷயங்களைக் கூட டிரெண்ட் செய்யும் அவரது ரசிகர்களுக்கு இன்று சொல்லவா வேண்டும். 

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Ajith Shalini wedding anniversary

Ajith Shalini Wedding Anniversary: தமிழ் சினிமாவில் ’ஐடியல் கப்பிள்’ என்ற வார்த்தைக்கு பொருத்தமானவர்கள் நடிகர் அஜித் - ஷாலினி தம்பதி.

Advertisment

இவர்கள் இருவரும் ’அமர்க்களம்’ திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தார்கள். அதன் பின்னர் காதல் திருமணமும் செய்துக் கொண்டார்கள். அந்த வகையில் இன்று தங்களது 19-வது திருமண நாளை அஜித் ஷாலினி இருவரும் கொண்டாடுகிறார்கள்.

2000-ம் வருடம் இதே தேதியில் இவர்களுக்கு திருமணமானது. 2008-ல் அனோஷ்கா என்ற மகளும், 2015-ல் ஆத்விக் என்ற மகனும் பிறந்தனர்.

#HappyWeddingDayAJITHSHALINI

Advertisment
Advertisements

குடும்பத்துக்கு அதிக முக்கியத்துவம் தரும் அஜித், படபிடிப்பு இல்லாத நாட்களில் தனது முழு நேரத்தையும் குடும்பத்தினருடன் செலவிடுவார். இவர்கள் குடும்பமாக பொது இடங்களுக்கு வந்து செல்லும் புகைப்படங்கள் அடுத்த நொடியே இணையத்தில் வைரலாகும்.

அஜித்தைப் பற்றிய சாதாரண விஷயங்களைக் கூட டிரெண்ட் செய்யும் அவரது ரசிகர்களுக்கு இன்று சொல்லவா வேண்டும்.

இவர்களை #HappyWeddingDayAJITHSHALINI என்ற ஹேஷ் டேக்கில் அஜித் ஷாலினி இருவரையும் வாழ்த்தி மகிழ்கிறார்கள் ரசிகர்கள்!

Ajith Shalini Tamil Cinema

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: