scorecardresearch

அஜித்தின் அடுத்தப்பட வெளியீட்டு தேதியும் அறிவிப்பு!

பெரும்பாலும் இந்தப் படத்திற்கான பூஜை ஆகஸ்ட் 29-ம் தேதி நடக்கும்.

Ner Konda Paarvai 2nd single edm song
Ner Konda Paarvai

நடிகர் அஜித் தற்போது ‘நேர் கொண்ட பார்வை’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.

பாலிவுட்டில் அமிதாப் பச்சன் – டாப்ஸி நடிப்பில் வெளியான ’பிங்க்’ படத்தின் ரீமேக்காக இப்படம் உருவாகியிருக்கிறது. ’சதுரங்க வேட்டை, தீரன்’ ஆகியப் படங்களை இயக்கிய, இயக்குநர் ஹெச்.வினோத் இதனை இயக்கியிருக்கிறார்.

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவரும், பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளருமான போனி கபூர் இதனை தயாரித்திருக்கிறார். வித்யா பாலன், ஷ்ரதா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

நேர் கொண்ட பார்வை திரைப்படத்தின் ட்ரைலர், கடந்த புதன் கிழமை வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து படம் வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து அஜித்தின் அடுத்தப் படத்தையும் ஹெச்.வினோத் இயக்க, போனி கபூரே தயாரிக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் நேர்க்காணல் ஒன்றில் போனி கபூர் கலந்துக் கொண்டார்.

அப்போது பேசிய அவர், “தல 60 உண்மை சம்பவங்களை மையமாக வைத்து, ஆக்‌ஷன் நிறைந்த பொழுதுபோக்கு படமாக இயக்கப்பட உள்ளது. பெரும்பாலும் இந்தப் படத்திற்கான பூஜை ஆகஸ்ட் 29-ம் தேதி நடக்கும். படத்தை 2020 ஏப்ரல் 10-ம் தேதி வெளியிட முடிவு செய்திருக்கிறோம்” என்றார்.

அஜித்தின் அடுத்தப் படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டதால், மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள் ரசிகர்கள்!

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Ajith thala 60 movie release date announced

Best of Express