Ajith top 5 romantic movies : ஆசை நாயகன் அஜித், காதல் மன்னன் அஜித் எங்கையோ கேட்ட மாதிரி இருக்கா? இப்ப ரசிகர்களால் அன்போடு ’தல’ என அழைப்படும் அஜித்தை பெண்கள் ஆரம்பத்தில் ஆசை நாயகன், காதல் மன்னன் என்று தான் கூறுவார்கள். காரணம், 90ஸ்-ல் வெளியான அஜித்தின் காதல் மன்னன், ஆசை, அவள் வருவாளா, காதல் கோட்டை, வாலி போன்ற படங்கள் பெண்கள் மத்தியில் அஜித்தை சாக்லேட் பாயாக மாற்றியது.
Advertisment
”பெண்கள் பின்னால் சுற்றாமல் பெண்ணே சுற்றும் பேரழகன் எவனோ அவனே காதல் மன்னன்”. இந்த வரிகள் அஜித்திற்கே நிஜமானது. அந்த காலக்கட்டத்தில் அஜித் தொடர்ந்து ரொமாண்டிக் படங்களை தேர்ந்தெடுத்து நடிக்கவும் தொடங்கினார். அஜித் என்றால் அழகு. அஜித் ஒரு படத்தில் கெஸ்ட் ரோல் வந்தால் கூட போதும் பெண்கள் அப்படி ரசித்து பார்ப்பார்கள். அஜித் நடித்த ’ரெட்டை ஜடை வயசு’ திரைப்படத்திற்கு பெண்கள் மத்தியில் அப்படி ஒரு வரவேற்பு. அந்த நேரத்தில் அஜித் படத்திற்காகவே தியேட்டருக்கு சென்ற பெண்கள் கூட்டமும் ஏராளம் தான்.
இப்படி பெண்களுக்கு மிகவும் பிடித்த லவ்வர் பாய் அஜித் தான், தீனா படத்திற்கு பிறகு தல-யாக மாறினார். அதன்பின்பு அஜித் தேர்ந்தெடுத்த திரைப்படங்கள ஆக்ஷன்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டது. இதனால் ஆண் ரசிகர்கள் அஜித்திற்கு அதிகமானர்கள். ஆனால் ஆரம்பத்தில் பெண் ரசிகர்கள் தான் அஜித்திற்கு ஏராளம். ஏன் இந்த திடீர் பிளாஷ்பேக் என்று நினைக்கிறீர்களா? இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வலைத்தளத்தில் இதுப்போன்ற நிறைய சுவாரசிய டாப் பிளாஷ்பேக்குகளை இனிமேல் நீங்கள் அடிக்கடி வாசிக்க போகிறீர்கள்.
இன்று முதல் முயற்சி நடிகர் அஜித்தில் இருந்து தொடங்குகிறது. அஜித் நடிப்பில் பெண்களுக்கு மிகவும் பிடித்த டாப் 5 ரொமாண்டிக் படங்களின் வரிசைகளை இன்று பார்க்கலாம் வாருங்கள்.
1. ஆசை:
அஜித் -சுபலட்சுமி நடிப்பில் வெளியான ஆசை திரைப்படம் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ஹிட். இந்த படத்தை பார்த்த பின்பு ஏகப்பட்ட பஸ் ஸ்டாண்ட் காதல்களும் மலர்ந்தது.
2. காதல் கோட்டை:
3 தேசிய விருதுகளை அள்ளி குவித்த படம். அஜித்- தேவையானி ஜோடி பொருத்தம் பற்றி பேசாதவர்களே இல்லை. பார்க்காத காதலும் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானது இந்த படம் மூலம் தான்.
3.காதல் மன்னன்:
ஏற்கனவே நிச்சயமான பெண்ணை துரத்தி துரத்தி காதலிப்பார். கடைசியில் அதுவும் சக்ஸஸ் தான். இந்த படத்தில் அனைத்து பாடல்களும் ஹிட் ரகம். அஜித்திற்கு ஏகப்பட்ட கல்லூரி மாணவிகள் இந்த படத்தை பார்த்து கடிதம் கூட எழுதியிருந்தனர்.
4. அவள் வருவாளா:
அஜித் - சிம்ரன் நடிப்பில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த படம். குறிப்பாக இந்த படத்தில் அஜித்தின் ரோல் பெண்களை பெருமளவில் கவர்ந்திருந்தது.
5. வாலி:
அஜித் திரைப்பயணத்தில் வாலி திரைப்படம் மிகப் பெரிய மைல்கல். இரட்டை தோற்றத்தில் தோன்றும் வில்லன் அஜித்தும் அழகோ அழகு.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil