/tamil-ie/media/media_files/uploads/2017/11/ajith.jpg)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான அஜித் கடந்த 18-ம் தேதி திருவான்மியூரிலுள்ள ஒரு பள்ளியில் வாக்களிக்க சென்றிருந்தார்.
தன் மனைவியுடன் சென்ற அவர், அங்கு வரிசையில் நிற்காமல், நேராக வாக்களிக்க சென்றதாகக் கூறப்படுகிறது. இதனால் வரிசையில் காத்துக் கொண்டிருந்த பொதுமக்களும், முதியோர்களும் கோபமடைந்திருக்கிறார்கள்.
Pic speaks????????#thalapathypic.twitter.com/32SX34yX8Q
— சிந்தனையாளன் ???????? (@appu0471) April 20, 2019
வாக்களித்துவிட்டு அஜித் - ஷாலினி திரும்பி வருகையில் கடுமையான எதிர்ப்பை தெரிவித்திருக்கிறார்கள். போலீஸார், பத்திரிக்கையாளர் என அஜித்தை சூழ்ந்துக்கொள்ள, அங்கே நெரிசலும் ஏற்படுகிறது. இந்த நேரத்தில் எதிர்பாராதவிதமாக பாட்டி ஒருவர் அஜித்தின் பின்னந்தலையில் ஓங்கி அடிக்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி அஜித் ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியது.
Wathaaaa ???? Best one seen on net today ???? that though process to sync with something out of nowhere ????#ஓட்பூத்தில்செமகாட்டுpic.twitter.com/ryB1gJeIE0
— TC (@TrollCinemaOff) April 20, 2019
பின்னர் விஜய் ரசிகர்கள் #ஓட்பூத்தில்செமகாட்டு என்ற ஹேஷ்டேக்கில் இதனை ட்ரெண்ட் செய்தனர். அதோடு விஜய் கூட்டத்தில் செல்லும் போது தன் மனைவியை எப்படி பாதுகாப்பாக செல்வார் எனவும் அதே சூழலில் அஜித் எவ்வாறு நடந்துக் கொள்வார் எனவும் ரசிகர்கள் பகிர்ந்தனர்.
இதற்கிடையெ கோபமான அஜித் ரசிகர்கள் எப்போதும் போல் விஜய்யை ட்ரோல் செய்ய #ஓட்பூத்தில்பாட்டிகிட்டஅடி என அஜித் வாங்கிய அடியை, விஜய் வாங்கியதாக பரப்பினர்.
இதற்கிடையே அஜித்தை அடித்தது யாரென்று, தீவிரமாக விசாரித்து வருகிறது காவல் துறை.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.