வலிமை படத்தின் அப்டேட் கேட்டு தொந்தரவு செய்த ரசிகர்களுக்கு விடையளிக்கும் விதமாக, நடிகர் அஜித் நடித்துள்ள வலிமைப் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. வலிமைப் படத்தின் போஸ்டரைப் பார்த்த அஜித் ரசிகர்கள், சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள், நெட்டிசன்கள் என பலரும் போஸ்டரை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கருத்து தெரிவித்து வைரலாக்கி வருகின்றனர்.
டீ கடை முதல் சலூன் கடைகள் வரை, முன்னணி ஊடகங்கள் முதல் சமூக ஊடகங்கள் வரை, திரையரங்கம் முதல் சர்வதேச விளையாட்டு அரங்கம் வரை, உள்ளூர் பிரமுகர் முதல் சர்வதேச பிரபலங்கள் வரை எல்லோரிடமும் வலிமை அப்டேட் எங்கே என்று கேட்டுவிட்டார்கள் அஜித் ரசிகர்கள். சமீபத்தில் நடந்த உலககோப்பை டெஸ்ட் போட்டியிலும் யூரோ கால்பந்து கோப்பையிலும்கூட கேட்டுவிட்டார்கள். ரசிகர்கள் வலிமை அப்டேட் கேட்காத இடமில்லை என்று ஆகிவிட்டது. ஒரு கட்டத்தில், ரசிகர்களின் அன்புத் தொல்லை தாங்காமல் அஜித்குமாரே அறிக்கை வெளியிடும் அளவுக்கு ஆகிவிட்டது.
எப்போது வலிமை அப்டேட் வெளியாகும் என்று ரசிகர்கள் காத்திருந்த நிலையில், வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் காத்திருப்பு முடிந்தது… நீங்கள் இங்கே பார்க்கலாம் என்று அஜித்தின் வலிமை படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மோஷன் போஸ்டரை இன்று (ஜூலை 11) வெளியிட்டார்.
வலிமை படத்தின் போஸ்டர் வெளியாவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பே அஜித் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் வலிமை என்று ட்ரெண்ட் செய்யத் தொடங்கிவிட்டனர்.
இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள வலிமை திரைப்படம் ஒரு மாஸ் ஆக்ஷன் படம் என்பது அதன் போஸ்டரும் மோஷன் போஸ்டரும் தெரிவிக்கிறது. Power is a state of mind அதாவது வலிமை என்பது ஒரு மனநிலை என்றுகுறிப்பிட்டு அஜித் மாஸ் எண்ட்ரி போஸ்டர் வெளியாகி உள்ளது.
வலிமை ஃபர்ஸ்ட் மோஷன் போஸ்டரை ரசிகர்கள் பலரும் தங்கள் சமூக ஊடக பக்கத்தில் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர்.
வலிமை ஃபர்ஸ்ட் மோஷன் போஸ்டர் வெளியானதையடுத்து, ரசிகர்கள், சினிமா பிரலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் நெட்டிசன்கள் என்ன கருத்து தெரிவித்து பகிர்ந்திருக்கிறார்கள் என்று பாருங்கள்… உங்களுக்காக கீழே தொகுத்து தருகிறோம்.
இயக்குனர் விக்னேஷ் சிவன், “ஆளுமை என்பது ஒரு மனநிலை” என்று குறிப்பிட்டு வலிமை ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டரை பகிர்ந்துள்ளார். மேலும், இந்த நேரத்தில் இருந்து ரசிகர்களுக்கு வானவேடிகை தொடங்குகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், அஜித்தின் வலிமை போஸ்டரைப் பகிர்ந்து , நான் வெற்றி பெற்றவுடன் வலிமை அப்டேட் வந்துவிட்டது என்று மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார். முன்னதாக, வானதி சீனிவாசன் தேர்தலின்போது, “சட்டமன்றத் தேர்தலில் தான் வெற்றிபெற்றால் வலிமை அப்டேட் கிடைக்கும் என கூறியிருந்தார்” என்பது குறிப்பிடத் தக்கது.
அஜித் ரசிகர்கள், வலிமை ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டரைப் பகிர்ந்து, இந்த போஸ்டரில் நிறைய விவரங்கள் மறைந்துள்ளது கம்மெண்ட் செய்யுங்கள் என்று பதிவிட்டுள்ளனர். பூமியே தெறிக்கும்விதமாக எல்லா இடத்திலும் கொண்டாட்டம் என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“