/tamil-ie/media/media_files/uploads/2019/06/veeram-remake-akshay-kumar.jpg)
Chandrayaan 2 Landing Live, Chandrayaan 2 Moon Landing Live
இயக்குநர் சிவா இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்த ’வீரம்’ திரைப்படம் ரசிகர்களிடம் மாபெரும் வெற்றி பெற்றது.
இதைத் தொடர்ந்து, இந்தப் படம் இந்தியில் ரீமேக்காவது உறுதி செய்யப்பட்டது. அஜித் நடித்த கதாபாத்திரத்தில் அக்ஷய் குமார் நடிப்பார் எனவும் கூறப்பட்டது.
ஆனால் தற்போது அக்ஷய் குமாரின் இடம் ‘ராஸி’ படத்தில் நடித்த விக்கி கெளஷலால் மாற்றப்பட்டிருக்கிறது. ஃபர்ஹத் சாம்ஜி இயக்கும் இந்தப் படத்திற்கு ’லொல்’ (LOL - Land Of Lungi) எனப் பெயரிடப்பட்டுள்ளது.
வீரம் படத்தின் ரீமேக்கில் நடிக்க அக்ஷய் குமார் இண்ட்ரெஸ்டுடனேயே இருந்திருக்கிறார். ஏற்கனவே சூர்யவான்ஸி, லக்ஷ்மி பாம் ஆகியப் படங்களுக்கு தேதிகளை ஒதுக்கிக் கொடுத்துவிட்டதால், தற்போது ‘லொல்’ படத்திற்கு கால்சீட் கொடுக்க முடியாத நிலையில் இருக்கிறார்.
சில மாதங்களுக்கு முன்பு சாம்ஜியை சந்தித்த விக்கி, ’லொல்’ படத்தின் கதையைக் கேட்டு அதில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார். தவிர, தமன்னா நடித்த ஹீரோயின் கதாபாத்திரத்தில் நடிக்க, தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
மசாலா ஆக்ஷன் காமெடி படமாக உருவாகும் இந்தப் படத்தின் மூலம் சாமானிய மக்களும் ஹீரோவாக கொண்டாடும் வகையில் விக்கி பேசப்படுவார், என்கிறார்கள் நெருங்கிய வட்டாரத்தினர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.