மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்து வரும் விடா முயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், சமீபத்தில் வெளியான இப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ இணையத்தில் வைரலாக பரவிய நிலையில், கோவை போலீசார் அட்வைஸ் செய்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளனர்.
துணிவு படத்திற்கு பிறகு அஜித் நடித்து வரும் படம் விடா முயற்சி. மகிழ் திருமேனி இயக்கி வரும் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வரும் நிலையில், அஜர்பைஜானல் இந்த படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வந்தது. தற்போது தவிர்க்க முடியாத சில காரணங்களால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த இரு தனிங்களுக்கு முன்பு லைகா நிறுவனம், படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டது.
அந்த வீடியோவில் நடிகர் அஜித், மற்றும் ஆரவ் ஒரே காரில் பயணிக்கின்றனர். அதிவேகமாக அஜித் காரை ஓட்ட, அந்த கார் விபத்திற்குள்ளாகி இருந்து. நல்வாய்ப்பாக இருவரும் சீட் பெல்ட் அணிந்திருந்ததால் ஏர்பக் ("AirBag") ஓபன் ஆகியதால் இருவரும் உயிர் தப்பி இருந்தனர். இந்த வீடியோ வைரலான நிலையில், கோவை மாநகர காவல்துறை அந்த வீடியோவை பதிவிட்டு வேர் சீட்பெல்ட் (Wear Seatbelt) என குறிப்பிட்டு சரி என்ற குறியை குறிப்பிட்டுள்ளனர். இதனை கோவை மாநகர காவல்துறையினர் எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“