Advertisment

அழகில் ஷாலினியை ஓரங்கட்டிய மகள் அனோஷ்கா.. ஷாமிலி பகிர்ந்த லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்!

ஷாலினியின் தங்கை ஷாமிலி’சமீபத்தில் இன்ஸ்டாவில் பகிர்ந்த புகைப்படம்’ இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Shalini Ajith

அழகில் ஷாலினியை ஓரங்கட்டிய மகள் அனோஷ்கா.. ஷாமிலி பகிர்ந்த லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்!

வினோத் இயக்கத்தில் அஜித்தின் ‘வலிமை’ படம் பிப்ரவரி 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, ஜிப்ரான் பின்னணி இசையமைத்துள்ளார்.

Advertisment

படத்தில் ஹுமா குரேஷி, கார்த்திகேயா கும்மகொண்டா உள்ளிட்ட பல நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர். திரையரங்குகளில் வெளியான, முதல் நாளிலேயே ‘வலிமை’ வசூலில் சாதனை படைக்கத் தொடங்கியது.

வர்த்தக ஆய்வாளர் மனோபாலா விஜயபாலன் தெரிவித்த தகவலின்படி மார்ச் 8 வரை, அஜித்தின் வலிமை படத்தின் மொத்த வசூல் 215.63 கோடி. மேலும் இதுவே அதிவேகமாக ரூ.200 கோடி வசூல் செய்த அஜித்தின் படம் என்று கூறப்படுகிறது.

publive-image

வலிமை பாக்ஸ் ஆபிசில்’ ஹிட் அடித்த அதே வேளையில்’ மார்ச் 2 அன்று ஆத்விக் ஏழாவது பிறந்தநாளை முன்னிட்டு, அஜித் தனது மனைவி ஷாலினி’ மகள் அனோஷ்கா, மகன் ஆத்விக் உடன் குடும்பத்துடன், ரெஸ்டாரன்டுக்கு சென்று கொண்டாடினார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

அஜீத் கண்ணாடியுடன் நீளமான வெள்ளை தாடியுடன் இருக்கும் படங்களை ரசிகர்கள் கொண்டாடினர்.

அஜித் மற்ற நடிகர்களை போல் அல்லாமல்’ மிகவும் தனிப்பட்ட வாழ்க்கை முறையை கடைபிடிப்பவர். இதுவரை எந்த சோஷியல் மீடியாவிலும் அவர் இல்லை. அவரது அன்றாட அப்டேட்ஸ்களை பார்ப்பதுவே அரிது. எப்போதாவது ரசிகர்கள் அஜித்துடன் எடுக்கும் படங்களை இணையத்தில் பகிர்வார்கள், அது எல்லாமே வைரலாகும்.

மேலும் ஷாலினியின் தங்கை ஷாமிலியும் தனது அக்கா, அக்கா மகளுடன் இருக்கும் படங்களை எப்போதாவது சோஷியல் மீடியாவில் பகிர்ந்து கொள்வார். அப்படி அவர் சமீபத்தில் பகிர்ந்த புகைப்படம்’ இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

அதில் தனது அக்கா ஷாலினி, மற்றும் அனோஷ்கா உடன் இருக்கும் படங்களை பகிர்ந்து’ என்னுடைய பெண்களுடன்’ இனிய மகளிர்தின வாழ்த்துகள் என எழுதியுள்ளார். அதில் ஷாலினி மஞ்சள் நிற புடவையில் வழக்கம்போல கூந்தலை ஃபிரியாக விட்டு, பார்க்க சிம்பிளாக இருக்கிறார். ஷாமிலி கிரே நிற புடவையில் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் உடன், காதில் ஜிமிக்கி மற்றும் சிம்பிளான மேக்கப் அணிந்து பார்ப்பதற்கு கிளாஸி ஆக இருக்கிறார். ஷாலினி மகள் அனோஷ்கா கருப்பு நிற ஷர்ட், ஸ்கர்ட் உடன், கண்ணாடி போட்டு வெஸ்டர்ன் டிரெஸில் படு மாஸாக இருக்கிறார்.

அதைப்பார்த்த பலரும்’ அனோஷ்கா பாப்பா நல்ல வளர்ந்து விட்டாள்.. மூன்று பேரையும் ஒன்றாக பார்ப்பதில் மகிழ்ச்சி, அழகாக இருக்கிறீர்கள் என கமென்ட் பதிவிட்டு வருகின்றனர். இதோ அந்த புகைப்படங்கள்!

publive-image
publive-image

சமீபத்தில், ஷாலினி, அனோஷ்கா, ஷாமிலி என அஜித் குடும்பமே சென்னையில் உள்ள பிரபல திரையரங்கில் வலிமை படத்தை பார்த்து ரசித்தனர். அந்த வீடியோவை ரசிகர்கள் கொண்டாடிய நிலையில்’ இப்போது இந்த புகைப்படங்கள் அஜித் ரசிகர்களுக்கு மேலும் ஒரு விருந்தாக அமைந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment