/tamil-ie/media/media_files/uploads/2020/02/template-2020-02-19T112936.857.jpg)
Ajith, ajith kumar, thala ajith, valimai shooting, bike accident, Ajith, injured, h. vinoth, nerkonda paarvai, fans, hashtag, trending
"தல" அஜித் நடித்து வரும் வலிமை படப்பிடிப்பில் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக வந்துள்ள தகவல், அஜித் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ரசிகர்கள், #GetWellSoonTHALA என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி அதை டுவிட்டரில் டிரென்ட் ஆக்கிவருகின்றனர்.
#Valimai shooting spot#அய்யோ_அம்மா_பைக்_ரேஸ்pic.twitter.com/oZlkrDvPmz
— adirs SeeKa (@SreeDaa) February 19, 2020
நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு நடிகர் அஜித், மீண்டும் இயக்குனர் ஹெச். வினோத் இயக்கத்திலான வலிமை படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடந்தது. அங்கு ஸ்டண்ட் காட்சிகளை படமாக்கினார் வினோத். இதையடுத்து சென்னையில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது.
சென்னையில் அஜித் சூப்பர் பைக்கில் ஸ்டண்ட் செய்யும் காட்சிகளை படமாக்கியுள்ளனர். அப்பொழுது அஜித் பைக்கில் இருந்து கீழே விழுந்து காயம் ஏற்பட்டது. . இருப்பினும் அஜித் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் தொடர்ந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.
அஜித், சிலநாட்கள் ஓய்வில் இருக்கவேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு. மீண்டும் ஐதராபாத்தில் நடைபெற உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.