/tamil-ie/media/media_files/uploads/2023/06/kabir.jpg)
கபீர் துஹான் சிங் திருமணம்
அஜித் நடித்த 'வேதாளம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமான நடிகர் கபீர் துஹான் சிங், தனது நீண்ட நாள் காதலியும் கணக்கு டீச்சரான சீமா சாஹலை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார்.
கபீர் துஹான் சிங் - சீமா சாஹல் திருமணம் அவர்களுடைய நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் ஃபரிதாபாத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் நடைபெற்றது.
சீமா சாஹல் ஹரியானாவைச் சேர்ந்த கணித ஆசிரியர் ஆவார். கபீர் துஹான் சிங் மற்றும் சீமா சாஹல் திருமண புகைப்படங்கள் இணையத்திலும் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. புதுமணத் தம்பதிகள் தங்கள் திருமணத்தில் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருந்தனர்.
Introducing you all to my Date for Forever ❤️ pic.twitter.com/Z6DQiH4h3d
— Kabir Duhan Singh (@Kabirduhansingh) June 24, 2023
ஊடகங்களுக்கும் தனது ரசிகர்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்ட கபீர் துஹான் சிங், "என் வாழ்க்கையில் இந்த புதிய இன்னிங்ஸைத் தொடங்குவதில் பாக்கியசாலியாகவும் அதிர்ஷ்டசாலியாகவும் உணர்கிறேன். கடவுளும் எனது ரசிகர்களும் எனக்கு எப்போதும் நிறைய அன்பையும் ஆசீர்வாதங்களையும் அளித்துள்ளனர். இந்த ஆசீர்வாதங்கள் சீமாவுக்கு தொடரும் என்று நம்புகிறேன். அவரது வாழ்க்கையில் என்றென்றும் சிறந்த ஹீரோவாக இருக்க முயற்சிப்பேன்.” என்று கூறியுள்ளார்.
றெக்க, காஞ்சனா 3, அருவம், ஆக்ஷன் மற்றும் தெற்கத்தி வீரன் உள்ளிட்ட தமிழ் படங்களில் கபீர் துஹான் சிங் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் பகாத் என்ற மராத்தி திரைப்படத்தில் நடித்துள்ளார்.
அஜீத் நடித்த வேதாளம் படத்தில் வில்லனாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான கபீர் துஹான் சிங், தனது காதலியும் கணக்கு டீச்சருமான சீமா சாஹலை திருமணம் செய்துள்ளார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.