நடிகர் அஜித் குமார் நடித்துள்ள ‘வலிமை’ படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 13ம் தேதி வெளியாகும் எறு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பு காரணமாக வலிமை படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்படுகிறது என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். ‘வலிமை’ படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டதையடுத்து அஜித் ரசிகர்கள் பலரும் தங்கள் கருத்துகளை சமூக ஊடகங்களில் தெரிவித்து வருகின்றனர்.
இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில், நடிகர் அஜித் நடிப்பில் ‘வலிமை’ திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை போனி கபூர் தயாரித்துள்ள்ளார். ‘வலிமை’ படத்தில் நடிகர் அஜித் குமாருடன் ஹியூமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ‘வலிமை’ படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 13ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அண்மையில், வெளியான ‘வலிமை’ படத்தின் ட்ரெய்லர் நல்ல வரவேற்பைப் பெற்றது.
தற்போது நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால், நாடு முழுவதும் கடும் கட்டுப்பாடுகளை மாநில அரசுகள் விதித்துள்ளன. இதனால், பொங்கலுக்கு வெளியாகவிருந்த ராஜமௌலியின் ‘ஆர்ஆர்ஆர்’, பிரபாஸ் நடித்துள்ள ‘ராதே ஷ்யாம்’ உள்ளிட்ட படங்கள் தேதி குறிப்பிடப்படாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளன.
இதனால்,‘வலிமை’ படம் குறிப்பிட்ட தேதியில் வெளியாகுமா என்று என்று ரசிகர்கள் சந்தேகம் எழுப்பி வந்தனர்.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதால், தமிழ்நாட்டில் கடும் கட்டுப்பாடுகளைத் தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால், ‘வலிமை’ படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
“ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்களின் நிபந்தனை இல்லாத ஆதரவும் கடினமான காலத்தில் அவர்களின் அன்பும்தான் எங்களுடைய சந்தோஷத்தின் ஆதாரம். அதுதான் இந்த கனவு புராஜெக்ட்டை வெற்றிகரமாக முடிப்பதற்கும் பிரச்னைகளையும் எதிர்கொள்வதற்கும் எங்களில் வலுவான நம்பிக்கையை உணரச் செய்தது. எல்லாரும் படத்தின் ஒவ்வொரு தருணத்தையும் சினிமா அரங்குகளில்தான் பார்த்து ரசிக்க வேண்டும் என்று விரும்பினோம். அதே நேரத்தில், பார்வையாளர்கள் ரசிகர்களின் நலன்தான் எங்களுடைய முடிவுக்கு முன்னால் இருந்தது. உலகம் முழுவதும் கோவிட் தொற்று அதிகரித்து வருகிறது. அதனால், கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதனால், சூழ்நிலை இயல்பு நிலைக்கு திரும்பு வரை எங்களுடைய ‘வலிமை’ படத்தின் வெளியீட்டை நாங்கள் தள்ளிவைக்க முடிவு செய்துள்ளோம். அனைவரும் தடுப்பூசி செலுத்துக்கொள்ளுங்கள். முகக் கவசம் அனியுங்கள். பாதுகாப்பாக இருங்கள். மிக விரைவில் உங்களை திரையங்குகளில் சந்திப்போம்” படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
வலிமை திரைப்படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டதால் அஜித் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். அதே நேரத்தில், திரைப்படத்தின் ரிலீஸைக் காட்டிலும் ரசிகர்கள், சினிமா பார்வையாளர்கள் நலனில் அக்கறைகொண்டு வலிமை படக்குழுவினர் எடுத்துள்ளதாக அஜித் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அஜித்தின் வலிமை ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது குறித்து ஒரு அஜித் ரசிகர் சமூக ஊடகங்களில் குறிப்பிடுகையில், “இருக்க இருக்க உங்க மேல மரியாதை கூடிட்டே போகுது அண்ணா” என்று குறிப்பிட்டுள்ளார்.
அதே போல, மற்றொரு ரசிகர், “என் சுயநலத்துக்காக எனைக்குமே என் ரசிகரகளை பயன்படுத்தியதில்ல, பயன்படுத்தவும் மாட்டேன்.” என்று கூறினார்.
அடங்காத அஜித் குரூப்ஸ் வத்(தல)க்குண்டு என்ற பக்கத்தில், ஏமாற்றம், ஏமாற்றம், ஏமாற்றம் மனசு ரொம்ப வலி(மை)க்குது It’s OK என்று குறிப்பிட்டு, அடங்காத அஜித் குரூப்ஸ் – மதுரை என்று குறிப்பிட்டுள்ளனர்.
இவ்வாறு அஜித் ரசிகர்கள், வலிமை ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது குறித்து கலவையாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“