Advertisment

அடிச்சு தூக்கிய தூக்குதுரை... வெளிநாட்டிலும் வசூலை அள்ளிய விஸ்வாசம்

Ajith-Nayanthara Starrer Viswasam Box Office Collection on Day 15: கடந்த ஜனவரி 10ம் தேதி வெளியான விஸ்வாசம் திரைப்படம் பாக்ஸ் ஆபீஸ் கலெக்‌ஷனை குவித்துள்ளது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
viswasam

viswasam

Viswasam Box Office Collection, Day 15 : சூப்பர் ஸ்டாரின் பேட்ட மற்றும் அல்டிமேட் ஸ்டாரின் விஸ்வாசம் ஆகிய இரண்டு படங்களும் கடந்த ஜனவரி 10 ஆம் தேதி வெளியாகி இருந்தது.பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த இரண்டு படங்கலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

Advertisment

கார்த்திக் சுப்புராஜுடன் முதல் முறையாக இணைந்துள்ள ரஜினி ‘பேட்ட’ படத்தில் நீண்ட காலத்திற்கு பின்னர் தனது முழு ஸ்டைலையும் இறக்கியுள்ளார். அதே போல அஜித், விஸ்வாசம் படத்தில் சென்டிமெண்டால் ரசிகர்களை மனமுருக செய்துள்ளார்.

Viswasam Box Office Collection : விஸ்வாசம் பாக்ஸ் ஆபீஸ் கலெக்‌ஷன்

ரஜினியின் பேட்ட மற்றும் அஜித்தின் விஸ்வாசம் இரண்டு படங்களும் வெற்றி தான். அதிலும் அஜித்தின் ‘விஸ்வாசம்’ வசூல் ரீதியாக மிகப்பெரிய சாதனையை செய்திருக்கிறது.ஓபனிங் கிங் என்று சொல்லக்கூடிய அஜித்தின் எந்த படங்களும் செய்யாத வசூல் சாதனையை ‘விஸ்வாசம்’ செய்திருப்பதாகவும் கூறுகிறார்கள்.

தளபதி விஜய் நடிப்பில் மெர்சல், சர்கார் ஆகிய இரண்டு படங்களுமே மெகா ஹிட் ஆனது. இப்படங்கள் வசூல் ரீதியாக பெரும் சாதனையை படைத்தது.ஆனால், இந்த சாதனையை பல திரையரங்குகளில் பொங்கலுக்கு வந்த விஸ்வாசம் படம் முறியடித்து வருகின்றது.

ஆரம்ப நாளில் பேட்ட, தமிழகத்தில் விஸ்வாசம் படத்தின் வசூலை மிஞ்சியது ஆனால், அடுத்து வந்த நாட்களில் விஸ்வாசம் படம் வசூலில் அடித்து தூக்கியது. வெளிநாட்டிலும் விஸ்வாசம் படத்துக்கு சிறப்பான வரவேற்பு உள்ளது.

புலம்பெயர்ந்த தமிழர்கள் வாழும் இலங்கை, அரபு நாடுகள், மலேசியா, பிரான்ஸ், சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் வெளியான நாளில் இருந்து கிட்டத்தட்ட 2 வாரங்களாக வசூலில் சாதனை படைத்து வருகிறது.

விஸ்வாசம் வெளியான அதேநாளில் தான் சூப்பர்ஸ்டார் ரஜினியின் பேட்ட வந்தது. அந்தப் படமும் வெளிநாடுகளில் சக்கைப்போடு போடுகிறது.ஆனால் பேட்டக்கு இணையாக சளைக்காமல் விஸ்வாசமும் செம வசூல் எனக் கூறப்படுகிறது.வெளிநாடுகளில் மட்டும் விஸ்வாசம் படம் இப்போது வரை 30 கோடி ரூபாய் வரை வசூல் நடத்தியிருக்கும் என தெரியவந்துள்ளது .

விஸ்வாசம் வெளிநாட்டு வசூல் நிலவரம்:

  • அமெரிக்கா : $258K
  • கனடா : $147
  • லண்டன் : $212K
  • ஃபிரான்ஸ் : $190K
  • ஐரோப்பியா :$388K
  • ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து : $115K
  • அமீரகம் : $1.18M
  • சிங்கப்பூர் : $537K
  • இலங்கை : $335K
  • மலேசியா : $1.29M
  • இந்தியா தவிர பிற நாடுகள் : $100K
Tamil Cinema Ajith
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment