நாகார்ஜூனாவின் இரண்டாவது மகனான அகில் அக்கினேனிக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இவ்விழாவின் புகைப்படங்களை நாகார்ஜூனா தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Akhil Akkineni gets engaged to Zainab Ravdjee, see photos
நாகார்ஜூனாவின் முதல் மகன் நாக சைதன்யாவிற்கும், நடிகை சோபிதா துலிபாலாவிற்கும் வரும் டிசம்பர் 4-ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது. இந்நிலையில், அவரது இரண்டாவது மகன் அகிலுக்கும் தற்போது நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.
இது குறித்து அவர் தனது சமூக வலைதள பக்கத்தில், "எங்கள் மகன் அகில் அக்கினேனுக்கும், எங்கள் மருமகளாகவிருக்கும் ஜைனப் ராவ்ஜீக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஜைனப்பை எங்கள் குடும்பத்திற்குள் வரவேற்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். இந்த இளம் ஜோடிக்கும் உங்கள் வாழ்த்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இது தொடர்பான புகைப்படங்களை அகிலும் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
ஜைனப் ராவ்ஜீ ஓவியராக உள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக அகிலும், ஜைனப்பும் பழகி வந்த நிலையில், தற்போது இவர்கள் இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இருவருக்கும் அடுத்த ஆண்டு திருமணம் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, அகில் அக்கினேனிக்கும் தொழிலதிபரான ஜி.வி. கிருஷ்ணா ரெட்டியின் பேத்திக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. எனினும், இந்த திருமணம் கடந்த 2017-ஆம் ஆண்டு நடைபெறும் எனக் கூறப்பட்ட நிலையில், திடீரென நிறுத்தப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“